இந்திய மார்கெட் வெயிட்டிங்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங்.. 270mAh பேட்டரி.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களையும் மரண வெயிட்டிங் மோடில் போட்டுவைக்கும்படியான பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 (Amazfit Active 2) ஸ்மார்ட்வாட்ச் களமிறங்க இருக்கிறது. இந்த பிரீமியம் மாடலின் வெளியீட்டு தேதி மற்றும் பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. அதேபோல விற்பனை விவரங்களும் வெளியாகிவிட்டன.
ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்து அனைத்து டெக் பிரியர்களுக்கும் ஸ்மார்ட்வாட்ச் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகரான பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஹெல்த் டிராக்கர்கள், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அதில் கிடைக்காத பீச்சர்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் கொடுக்கின்றன. இதில் அமேஸ்ஃபிட் நிறுவனம் பட்டையை கிளப்பிவருகிறது.

பிரீமியம் மாடல் ஸ்மார்ட்வாட்ச்களை இந்திய மார்கெட்டில் களமிறக்கி வருகிறது. அந்த வரிசையில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலானது ஏற்கனவே அமெரிக்கா மார்கெட்டில் வெளியாகி விற்பனைக்கும் வந்துவிட்டது. அங்கு மிகப்பெரும் வரவேற்பு பெற்றதால், இப்போது இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், அமெரிக்கா மார்கெட்டில் இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே இங்கும் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, அங்கு இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலுக்கு கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள் (Amazfit Active 2 Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 19 நாட்கள் பேக்கப் கொடுக்கும்படியான 270mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த 19 நாட்களுக்கான பேக்கப் பேட்டரி சேவர் மோடில் (Battery Saver Mode) கிடைக்கிறது. அதுவே ஹெவி யூசேஜ் மோடில் (Heavy Use Mode) 5 நாட்களுக்கு மட்டுமே பேக்கப் கிடைக்கும்.
இதில் இன்-பில்ட் ஜிபிஎஸ் (In-built GPS) கனெக்டிவிட்டி வருவதால், ஜிபிஎஸ் மோடில் (GPS Mode) பயன்படுத்தினால் 21 மணி நேரங்களுக்கு பேக்கப் வருகிறது. மேலும், டைபிகல் யூஸ் மோடில் (Typical Use Mode) 10 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கப்படுகிறது. இன்-பில்ட் ஜிபிஎஸ் மட்டுமல்லாமல், ஆஃப்-லைன் மேப்ஸ் (Offline Maps), டர்ன் டூ டர்ன் நேவிகேஷன் (Turn to turn navigation) சப்போர்ட் கிடைக்கிறது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.32 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு சப்பயர் கிளாஸ் (Sapphire Glass) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 353 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 400+ வாட்ச் பேஸ்கள் சப்போர்ட் உள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், ஆன்டி-பிங்கர்பிரிண்ட் கோட்டிங் கிடைக்கிறது.
இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. இதன் மூலம் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் டிடெக்சன் கிடைக்கிறது.
ஆகவே, இதுபோன்ற முக்கியமான ஆக்டிவிட்டிகளை நீங்கள் செய்யும்போது ஆட்டோ-டிடெக்ட் ஸ்போர்ட்ஸ் மோட் ஆன் செய்யப்பட்டு, டேட்டாக்கள் சேகரிக்கப்படும். இதுபோக 160+ வொர்க்அவுட் மோட்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கிட்டத்தட்ட முக்கிய சென்சார்களும் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, ஹெல்த் & ஆக்டிவிட்டிகளுக்கு குறையில்லை.
ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர், மென்சுரல் டிராக்கர் போன்ற முக்கிய ஹெல்த் பீச்சர்கள் உள்ளன. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலின் ஆரம்ப விலை அமெரிக்காவில் ரூ.8,600ஆக இருக்கிறது. இங்கே அதே விலையில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதியில் இங்கு வெளியாகும்போது தெரியவரும்.


Click it and Unblock the Notifications








