Home
Gadgets

புரட்டிப் போட்டாப்ல.. AMOLED டிஸ்பிளே.. 270mAh பேட்டரி.. AI அசிஸ்டன்ட்.. BIO டிராக்கர்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, 5 ஏடிஎம் ரெசிஸ்டன்ட், 270mAh பேட்டரி, 10 நாட்கள் பேக்கப், பயோடிராக்கர், 164 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஜெப் கோச், ஏஐ அசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 (Amazfit Active 2) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியில் லெதர் மற்றும் சிலிகான் வெர்ஷனில் கிடைக்கும் இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள் (Amazfit Active 2 Specifications): இந்த அமேஸ்ஃபிட் மாடலில் 1.32 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 353 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் கிடைக்கும் சபையர் கிளாஸ் (Sapphire Glass) வருகிறது. 2.5D டெம்பர்ட் கிளாஸ் கிடைக்கிறது.

புரட்டிப்போட்டாப்ல.. AMOLED டிஸ்பிளே.. 270mAh பேட்டரி.. AI அசிஸ்டன்ட்!

ஆன்டி-பிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) சப்போர்ட் உள்ளது. டிசைனை பார்க்கையில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெசல் (Stainless Steel Bezel) மற்றும் பாலிமர் மிடில் ஃபிரேம் (Polymer Middle Frame) கொண்டுள்ளது. இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ரோடார் மோட்டார் (Rotor Motor) இருக்கிறது. பிளாக் லெதர் பிரீமியம் வெர்ஷன் கிடைக்கிறது.

அதேபோல ரெட் ஸ்போர்ட் சிலிகான் (Red Sport Silicone) மற்றும் பிளாக் ஸ்போர்ட் சிலிகான் (Black Sport Silicone) வேரியண்ட்களிலும் வருகிறது. பிரீமியம் பீச்சர்களுடன் கிளாசிக் லுக் கொடுக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் 270mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 10 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். பேட்டரி சேவர் மோடில் 17 நாட்களுக்கு கிடைக்கும்.

மேலும், ஹெவி யூசேஜ் மோடில் 5 நாட்களுக்கும், ஜிபிஎஸ் மோடில் 21 மணி நேரங்களுக்கும் பேக்கப் எதிர்பார்க்கலாம். மேக்னடிக் சார்ஜிங் பேஸ் கிடைக்கிறது. 2 மணி நேரங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களுக்கு ப்யோடிராக்கர் 6.0 (BioTracker 6.0) சப்போர்ட் உள்ளது. இதில் பல்வேறு சென்சார்கள் இருக்கின்றன.

ஆகவே, கைரோஸ்கோப் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், பாரோமெட்ரிக் அல்டிமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், டெம்ப்ரேச்சர் சென்சார், ஆக்சிலரேஷன் சென்சார் போன்றவை கிடைக்கின்றன. 5 சாட்டிலைட் போசிஷனிங் சப்போர்ட் மற்றும் சர்குலர்லி-போலாரைஸ்டு ஆண்டெனா டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி இருக்கிறது. 164 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. ரன்னிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற 8 ஸ்போர்ட்ஸ் மூவ்மெண்ட்களை டிடெக்ட் செய்துகொள்ளும்படி ஸ்மார்ட் ரிககனைசேஷன் சப்போர்ட் உள்ளது. ஆகவே, டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக ஸ்டோர் செய்யப்படும்.

ஆக்டிவிட்டிகளுக்காக ஜெப் கோச் (Zepp Coach) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக கூகுள் ஃபிட் (Google Fit) மற்றும் ஆப்பிள் ஹெல்த் (Apple Health) சப்போர்ட் வருகிறது. ஹார்ட்ரோட், பிளட்-ஆக்ஸிஜன், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் வருகிறது. ஸ்கின் டெம்ப்ரேச்சர், ஸ்லீப் குவாலிட்டி, ப்ரீத்திங் எக்சர்சைஸ், மென்சுரல் டிராக்கிங் போன்றவை டிராக் செய்ய கிடைக்கிறது.

5 ஏடிஎம் ரெசிஸ்டன்ட் கிடைப்பதால், ஸ்விம்மிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஜெப் ஃப்ளோவ் (Zepp Flow) ஏஐ அசிஸ்டன்ட், மியூசிக் கன்ட்ரோல், கேமரா கன்ட்ரோல், நோட்டிபிகேஷன், குயிக் கால் ரிப்ளை போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. லெதர் ஸ்ட்ராப் வெர்ஷனின் விலை ரூ.11,100ஆகவும், சிலிகான் வெர்ஷனின் விலை ரூ.8,600ஆகவும் இருக்கிறது.

இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, அமெரிக்காவில் முதலில் விற்பனை வருகிறது. இந்தியாவில் அமேஸ்ஃபிட் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், அடுத்த சில வாரங்களில் இங்கும் எதிர்பார்க்கலாம். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு இந்த மாடல் பக்கா ஆப்ஷனாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit Active 2 With 270mAh Battery AMOLED Display Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X