புரட்டிப்போடும் பட்ஜெட்! AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங்.. 260mAh பேட்டரி.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி அமோலெட் டிஸ்பிளே, 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், பயோடிராக்கர் 6.0 சென்சார், 260mAh பேட்டரி, ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் (Amazfit Active 2 Square) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு நிகரான விலைக்கு வெளியாகி இருப்பதால், பிரீமியம் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த பீச்சர்களை பார்த்தால், யாருக்கும் வாங்கலாம் என்று தோன்றலாம். இதுகுறித்த விவரம் இதோ.
இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலானது, ஜூன் மாத தொடக்கத்தில் குளோபல் மார்கெட்டில் வெளியானது. பீச்சர்களில் பட்டையை கிளப்பியதால் இந்தியாவிலும் எதிர்பார்ப்பு எகிறியது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய மார்கெட்டில் கொஞ்சம் அதிக விலைக்கு வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் சாம்சங், கூகுள் மாடல்களுக்கு நிகரான விலை கிடையாது.

அதைவிட கொஞ்சம் குறைவுதான். ரூ.12,999ஆக பட்ஜெட் இருக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச்சில் ஏற்கனவே ரவுண்ட் டிசைன் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இப்போது, இந்த ஸ்கொயர் டிசைன் மாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களை பார்த்துவிட்டு, விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் அம்சங்கள் (Amazfit Active 2 Square Specifications): இந்த மாடல் விலைக்கு ஏற்ப குவாலிட்டியில் பட்டையை கிளப்பி இருக்கிறது. சப்பையர் கிளாஸ் (Sapphire Glass) + 2.5D டெம்ப்பர்ட் கிளாஸ் (Tempered Glass) மற்றும் ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-fingerprint Coating) கொண்ட 1.75 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவில் அவுட்டோர் அவுட்புட்டுக்கு ஏற்ப 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 341 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. பிளாக் லெதர் ஸ்ட்ராப் மற்றும் ஆரஞ்ச் சிலிகான் ஸ்ட்ராப் கிடைக்கிறது. கிரே ஷேடு கொடுக்கும்படியான பிளாக் கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பாடி பெசல் உள்ளது.

அதேபோல பாலிமர் கேஸ் (Polymer Case) கிடைக்கிறது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலில் ரோட்டேட்டிங் கிரவுண்ட் கிடையாது. கன்ட்ரோல் பட்டன்கள் மட்டுமே கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 எல்இ (Bluetooth 5.2 LE) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் மற்றும் அதற்காக இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built microphone) மற்றும் ஸ்பீக்கர் கிடைக்கிறது.
அமேஸ்ஃபிட் மாடல்களில் பிரத்யேகமாக கிடைக்கும், ஜெப் ஓஎஸ் 4.5 (Zepp OS 4.5) வருகிறது. இந்த ஓஎஸ் மூலம் ஜெப் ப்ளோ (Zepp Flow) ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதன் மூலம் ஹேண்ட்-ப்ரீ கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்காக ஜெப் கோச் (Zepp Coach) கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரன்னிங் உள்ளிட்ட சில ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிகளுக்கு விர்ச்சுவலாக கோச் கைடென்ஸ் கிடைக்கும். பெரும்பாலான பிரீமியம் சென்சார்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. யோடிராக்கர் 6.0 பிபிஜி (BioTracker 6.0 PPG) முதல் டெம்ப்ரேச்சர், ஆக்சிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், கைரோஸ்கோப் போன்ற 5-க்கும் மேற்பட்ட சென்சார் கிடைக்கின்றன.
ஆகவே, ஹார்ட் ரேட் மற்றும் எஸ்பிஓ2 மானிட்டர்கள், ஸ்ட்ரெஸ் மற்றும் ஸ்லீப் டிராக்கர்கள் போன்ற முக்கிய ஹெல்த் பீச்சர்கள் உள்ளன. மேலும், 260mAh பேட்டரி கிடைக்கிறது. 19 நாட்கள் பேக்கப் பெறலாம். பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி வருகிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. 12ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








