Home
Gadgets

இது வேற ரகம்.. பாக்கதான் கிளாசிக் லுக்.. ஆனால், AMOLED டிஸ்பிளே.. PPG சென்சார்.. இன்-பில்ட் GPS.. எந்த மாடல்?

பிரீமியம் கிளாசிக் டிசைன் மட்டுமல்லாமல், 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 19 நாட்கள் பேக்கப் கொண்ட 260mAh பேட்டரி, 5ATM ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட், பிபிஜி சென்சார் கொண்ட ஹெல்த் மானிட்டரிங் போன்ற பீச்சர்களுடன் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் (Amazfit Active 2 Square) ஸ்மார்ட்வாட்ச் வெளியாகி இருக்கிறது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட், ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ஜெப் கோச் போன்ற பிரீமியம் பீச்சர்களும் கிடைக்கின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இந்திய மார்கெட்டில் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் மற்றும் அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 (ரவுண்ட் டயல்) மாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கொடுத்ததால், நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால், முதலில் அமெரிக்க மார்கெட்டில் வெளியாகின. அதன்பிறகே இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

இது வேற ரகம்.. பாக்கதான் கிளாசிக் லுக்.. ஆனால், AMOLED டிஸ்பிளே!

இதேபோல அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலானது, அமெரிக்க மார்கெட்டில் இப்போது வெளியாகி இருக்கிறது. கிளாசிக் டிசைனில் டிரெண்ட்டிங் ஸ்மார்ட்வாட்ச் பீச்சர்களை கொடுக்கிறது. இதுபோக பில்ட் குவாலிட்டி மற்றும் ரெசிஸ்டன்ட் பீச்சர்களிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்லலாம்.

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் அம்சங்கள் (Amazfit Active 2 Square Specifications): சப்பையர் கிளாஸ் (Sapphire Glass) கொண்ட 1.75 இன்ச் (390 x 450 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 341 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் ஸ்டெயின்லெஸ்-ஸ்டீல் பாடி பெசல் & பாலிமர் கேஸ் கிடைக்கிறது.

கன்ட்ரோல்களுக்கு கிரவுண் கொடுக்கப்பட்வில்லை. 2 பட்டன்கள் கிடைக்கின்றன. இந்த குவாலிட்டிக்கு ஏற்ப 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பிரீமியம் அமேஸ்ஃபிட் மாடல்களில் கிடைக்கும ஜெப் ஓஎஸ் 4.5 (Zepp OS 4.5) கிடைக்கிறது. ஜெப் ப்ளோ ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (Zepp Flow AI Voice Assistant), ஜெப் கோச் (Zepp Coach) சப்போர்ட் கிடைக்கிறது.

இது வேற ரகம்.. பாக்கதான் கிளாசிக் லுக்.. ஆனால், AMOLED டிஸ்பிளே!

இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலில் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதுபோக ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போலவே குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), கியூஇசட்எஸ்எஸ் (QZSS) சப்போர்ட் கிடைக்கிறது. பில்ட்-இன் மைக்ரோபோன் & ஸ்பீக்கர்களுடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கிடைக்கிறது.

ஹெல்த் டிராக்கர்கள் மற்றும் மானிட்டர்களுக்காக பயோடிராக்கர் 6.0 பிபிஜி (BioTracker 6.0 PPG) சென்சார், டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor) வருகிறது. மேலும், ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), ஆம்பியன்ட் லைட் (Ambient Light) சென்சார், பரோமீட்டர் (Barometer), கைரோஸ்கோப் (Gyroscope) மற்றும் ஜியோமேக்னடிக் (Geomagnetic) போன்றவை கிடைக்கின்றன.

இந்த சென்சார்கள் மூலம் ரன்னிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் போன்ற 8 மூவ்மெண்ட்கள் மற்றும் 25 ஆக்டிவிட்டிகளை டிடெக்ட் செய்துகொள்ளும்படி ஸ்மார்ட் ரிககனைசேஷன் (Smart Recognition) கிடைக்கிறது. இதுபோக ஜெப் கோச் மூலம் டிராக் ரன், ரேஸ் பிரிடிக்சன் போன்ற கைடன்ஸ் கிடைக்கிறது. இப்போது, ஹெல்த் மானிட்டர்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலில் ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங், ஸ்கின் டெம்ப்ரேச்சர் டிராக்கிங், மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் போன்ற பெரும்பான ஹெல்த் பீச்சர்கள் கிடைக்கின்றன. 160+ வொர்க்அவுட் மோட்ஸ் உள்ளது. 19 நாட்கள் பேக்கப் மற்றும் 260mAh பேட்டரி வருகிறது. ஜிபிஎஸ் மோடில் 21 மணி நேரங்களுக்கு கிடைக்கும்.

பிளாக் கலரில் கிடைக்க இருக்கிறது. லெதர் மற்றும் சிலிகான் ஸ்ட்ராப்கள் கிடைக்கின்றன. இந்த அமேஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்கொயர் மாடலின் விலை ரூ.12,951ஆக இருக்கிறது. அமேஸ்ஃபிட் மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களை இது கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit Active 2 Square With AMOLED Display Built-in GPS Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X