அசத்தும் சாம்சங் நிறுவனத்தின் ஏகேஜி வயர்லெஸ் ஹெட்போன்கள்.!
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏகேஜி ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்போன்கள் பேலன்ஸ் செய்யப்பட்ட டுஸ்டியே தர ஆடியோ அனுபவத்தை வழங்கும்
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய N700NC, Y500, மற்றும் Y100 வயர்லெஸ் ஏகேஜி ஹெட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்போன்கள் பேலன்ஸ் செய்யப்பட்ட டுஸ்டியே தர ஆடியோ அனுபவத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏகேஜி N700NC மாடல் இசை விரும்பிகளுக்கு ஏற்றதாக ஸ்டூடியோ தர ஆடியோ வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. அடாப்டிவ் நாய் கோன்சலிங் தொழில்நுட்பமும் கொண்டிருக்கும். N700NC ஹெட்போன் கொண்டு பயனர்கள் வெளிப்புற சத்தம் எந்தளவு தங்களுக்கு கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.
இதனுடன் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஆம்பியன்ட் அவர்னஸ் போன்றவற்றை சம அளவில் இயக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகேஜி யு 500 மாடலில் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்ட வழங்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு ப்ளூடுத் சாதனங்களுடன் ஓரே நேரத்தில் இணைத்துக் கொள்ளலாம். ஹெட்போன்களை காதில் இருந்து அகற்றினால், ஆடியோ தானாகவே நின்றுவிடும். பின் மீண்டும் காதில் வைத்தால் ஆடியோ தானாகவே இயங்கும்.
ஏகேஜி வயர்லெஸ் யுஎஸ் 100 இயர்போன் குறைந்த எடையில் அதிக உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை க்ளிக் மூலம் ஆம்பியன்ட் அவேர் அம்சத்தை இயக்கும் வசதி கொண்டுள்ளது. யு 500 மற்றும் யு 100 வயர்லெஸ் ஹெட்போன்கள் விலை அமெரிக்காவில் முறையே 149.95 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.10,810, 99.55 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்700என்சி ரூ.25,320 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஹெட்போன்களும் அமெரிக்காவில் ஏகேஜி அதிகாரப்பூர்வ வலைத்தளம், அமேசான், சாம்சங் வலைதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications