Home
Gadgets

43இன்ச் 55 இன்ச்களில் கலக்கும் ஐவா டிவிகள்: விலை ரூ.7999 தான்.!

ஆடியோ மற்றும் காட்சி பொழுபோக்கு தொடர்பான மின்னனு சாதனங்களை இந்திய நுகர்வோர்களிடம் விற்பைன செய்யும் நோக்கில் ஐவா நுழைந்தது. தற்போது புதுப்பிக்கப்பட்ட வகையில், 43 இன்ச் 55இன்ச், 75இன்ச் என்ற அளவுகளில்

ஆடியோ மற்றும் காட்சி பொழுபோக்கு தொடர்பான மின்னனு சாதனங்களை இந்திய நுகர்வோர்களிடம் விற்பைன செய்யும் நோக்கில் ஐவா நுழைந்தது.

43இன்ச் 55 இன்ச்களில் ஐவா கலக்கும் ஐவா டிவிகள்: விலை ரூ.7999 தான்.!

தற்போது புதுப்பிக்கப்பட்ட வகையில், 43 இன்ச் 55இன்ச், 75இன்ச் என்ற அளவுகளில் புதிய 4 கே அல்ட்ரா ஹை டெபஷினல் எல்இடி டிவி , ஸ்மார்ட் ஹோம் ஆடியோ சிஸ்டத்தில் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த டிவிகளின் விலை மலிவானதாகவும் இருக்கின்றது. தற்போது விலை ரூ.7999 முதல் துவங்குகின்றது. இதன் குறித்து நாம் விரிவாக காணலாம்.

ஐவா டிவிகளின் நிலவரம்:

ஐவா டிவிகளின் நிலவரம்:

புதுப்பிக்கப்பட்ட ஐவா நிறுவனம் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம், ஸ்மார்ட் 4 கே அல்ட்ரா ஹை டெபனிஷன் எல்இடி டி.வி, ஸ்மார்ட் ஹோம் ஆடியோ சிஸ்டம்ஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் தனிப்பட்ட ஆடியோ தயாரிப்புகளை சமீபத்திய அம்சங்களுடன் விற்பனை செய்ய ஐவா தயாராக உள்ளது.

விலை மலிவதான இருக்கும்:

விலை மலிவதான இருக்கும்:

ஐவா ஒரு அனுபவம் வாய்ந்த நுகர்வோர் மின்னணு பிராண்ட் ஆகும். இதனால், நுகர்வோர்களிடம் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் ஆடியோ காட்சி பொழுதுபோக்கு சந்தையில், சிறப்பன வரவேற்பும் இருக்கின்றது. புதிய தொழில்நுட்பத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலை வரம்பு, பலவிதமான தயாரிப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் வழங்க நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம் என ஐவா இந்திய இயக்குனர் இந்தர்ஜீத் சிங் குஜ்ரால் தெரிவித்துள்ளார்.

ஐவா டிவிகளின் வகைகள்:

ஐவா டிவிகளின் வகைகள்:

ஐவாவின்- 75 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவியை வெளியிடுவதற்கான நிகழ்வில் நடிகரும் பாடகருமான பாலாஷ் சென் கலந்து கொண்டார். ஐவா ல் அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் 55 இன்ச் QLED ஸ்மார்ட் டிவி மற்றும் 43 அங்குல அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி ஆகியவை அடங்கும்.

மலிவான விலை ரூ.7999:

மலிவான விலை ரூ.7999:

எல்.இ.டி பேனல்களின் முக்கிய சிறப்பம்சங்கள் குவாண்டம் டாட்ஸ் லைட் எமிட்டிங் டெக்னாலஜி, சூப்பர்லேடிவ் ரெசல்யூஷன், குவாண்டம் ஸ்மார்ட் எச்டிஆர், குரல் கட்டளை தொழில்நுட்பத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆகியவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எல்.இ.டி டிவிகளின் விலை ரூ.7,999 முதல் 1,99,000 வரை இருக்கும்.

நுகர்வோர்களின் தேவையை பூர்த்தியாகும்:

நுகர்வோர்களின் தேவையை பூர்த்தியாகும்:

ஐவா இன்டர்நேஷனல் ஜெப்ரி ஆலன் கோல்ட்பர்க் கூறுகையில், "இந்திய நுகர்வோர் மிகவும் புதுமையான தொழில்நுட்பத்தை விரும்புகின்றனர். ஐவா இந்திய நுகர்வோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்றார் போல், இதன் வடிவமைப்புக்கும் இருக்கும் இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று விரும்புகின்றேன்" என்றார்.

வீடியோ நோக்கம்:

வீடியோ நோக்கம்:

இன்றைய சந்தையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தயாரிப்பு வளர்ச்சியின் விரைவான வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, ஐவா அதன் தனித்துவமான மற்றும் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்.

இது எளிய, மலிவு, பயனர் நட்பு மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பொருத்தமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. ஸ்மார்ட் ஹோம் ஆடியோ அமைப்புகள், குரல் இயக்கப்பட்ட புளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் தனிப்பட்ட ஆடியோ தயாரிப்புகளையும் ஐவா வெளியிட்டது. நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 200,000 யூனிட்டுகளை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரூ.200 கோடி முதலீடு:

ரூ.200 கோடி முதலீடு:

ஐவா இந்திய நிர்வாக இயக்குனர் மன்மித் சவுத்ரி கூறுகையில், இந்திய நுகர்வோருக்கு விலை மற்றும் புதுமையான அம்சங்களைக் கொண்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை நாங்கள் வழங்குவோம். இந்த வெளியீடு எளிய மற்றும் மலிவு தொழில்நுட்ப தயாரிப்புகளை வழங்குவது முதல்படியாகும். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் ரூ .200 கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். "

Best Mobiles in India

English summary
Aiwa re-enters India with Smart 4K Ultra HD LED TVs prices start at Rs 7,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X