COVID-19 வைரஸை செயலிழக்க செய்கிறதா இந்த புது ஏர் பியூரிஃபையர்? இந்தியாவில் அசத்தும் AiRTH!

|

கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் சில இடங்களில் தலையோங்க துவங்கியுள்ள நிலையில், கோவிட்-19 வைரஸை ஒரு நிமிடத்தில் செயலிழக்கச் செய்யும் ஒரு புதிய AiRTH ஏர் பியூரிஃபையர் டிவைஸை இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய கவலையாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரு தீர்வே இல்லையா என்பது புலம்பும் மக்களுக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்துவிட்டது.

மக்கள் சந்தித்த சிக்கல்களுக்குக் கணக்கே இல்லை

மக்கள் சந்தித்த சிக்கல்களுக்குக் கணக்கே இல்லை

உண்மையைச் சொல்ல போனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் சந்தித்த சிக்கல்களுக்குக் கணக்கே இல்லை. குறிப்பாக, நாள் முழுவதும் முகக்கவசங்களை அணிவதும், நாள் முழுவதும் கைகளைச் சுத்தப்படுத்துவதும் வழக்கமாக இருந்தது, இன்னும் இந்த நிலை தான் தொடருகிறது. இந்த சிரமங்களில் இருந்தெல்லாம் தீர்வு கிடைக்குமா என்று புலம்பிய பொதுமக்களின் கேள்விக்கு, ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி பாம்பே இணைந்து பதிலளித்துள்ளது.

காற்றில் பரவும் கொடூரமான வைரஸை இது அழிக்குமா?

காற்றில் பரவும் கொடூரமான வைரஸை இது அழிக்குமா?

காற்றில் பரவும் இந்த கொடூரமான வைரஸை ஒரு நிமிடத்தில் செயலிழக்கச் செய்யும் புதிய ஏர் பியூரிஃபையர் கருவியை ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி பாம்பே இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த புதிய ஏர் பியூரிஃபையர் கருவியானது கோவிட்-19 வைரஸை ஒரு நிமிடத்தில் செயலிழக்கச் செய்யும் என்று கூறியது உண்மை தானா? இதுவரை, யாரும் செய்து முடிக்க முடியாத ஒரு காரியத்தை இந்தியாவின் IIT எப்படி சாத்தியமாக்கியது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய AiRTH ஏர் பியூரிஃபையர்

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய AiRTH ஏர் பியூரிஃபையர்

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமான இன்குபேஷன் அண்ட் இன்னோவேஷன் சென்டரில் (SIIC) என்ற நிறுவனத்தில் இருந்து தான் இந்த ஏர் பியூரிஃபையர் வெளிவந்துள்ளது. இந்த புதிய டிவைஸிற்கு நிறுவனம் AiRTH என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஏர் பியூரிஃபையர் "ஆன்டி மைக்ரோபியல் ஏர் ப்யூரிஃபிகேஷன் டெக்னாலஜி (Anti Microbial Air Purification Technology)" என அழைக்கப்படும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் பியூரிஃபையர் மற்ற சாதாரண ஏர் பியூரிஃபையர் கருவிகளைப் போல் இல்லாமல் தனித்துவமாகச் செயல்படுகிறது.

அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?அம்மாடி! 12000mah பேட்டரியுடன் Smartphone-ஆ? பேட்மேன் லுக் வேற அள்ளுதே! விலையும் இவ்வளவு கம்மியா?

99.9% செயல்திறனுடன் SARS-CoV-2 வைரஸை AiRTH கட்டுப்படுத்துமா?

99.9% செயல்திறனுடன் SARS-CoV-2 வைரஸை AiRTH கட்டுப்படுத்துமா?

நாம் முன்பே சொன்னது போல், இந்த புதிய ஏர் பியூரிஃபையர் டிவைஸ் ஆனது SARS-CoV-2 வைரஸை 99.9% செயல்திறனுடன் 1 நிமிடத்திற்குள் செயலிழக்கச் செய்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த தொழில்நுட்பம் CSIR-IMTECH ஆல் சரிபார்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியச் சந்தையில் இதற்கு முன்னாள் வேறு எந்தவொரு நிறுவனமும் இப்படி ஒரு செயல்பாட்டில் இயங்கும் ஏர் பியூரிஃபையர் கருவிகளைச் சந்தைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண ஏர் பியூரிபையர் டிவைஸ் இது இல்லை

சாதாரண ஏர் பியூரிபையர் டிவைஸ் இது இல்லை

குறிப்பாக ஒரு நிமிடத்தில் கொரோனாவை செயலிழக்கச் செய்யும் அம்சங்களுடன் இதுவரை எந்தவொரு ஏர் பியூரிபையர் டிவைஸ்களும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போது, ​​இந்தியச் சந்தையில் பல ஏர் பியூரிபையர் டிவைஸ்கள் கிடைக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் காற்றில் உள்ள முக்கியமாகத் துகள்களைக் கைப்பற்றும் சுத்திகரிப்பு நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றன. இருப்பினும், பல ஆண்டுகளாக, ஏர் பியூரிபையர் டிவைஸ்களில் உள்ள பில்டர்கள் கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறுவதை AiRTH கண்டுபிடித்தது.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தாவர அடிப்படையிலான கோட்டி கொண்ட ஏர் பியூரிஃபையரா இது?

தாவர அடிப்படையிலான கோட்டி கொண்ட ஏர் பியூரிஃபையரா இது?

இதை தடுக்க, AiRTH உருவாக்கிய தொழில்நுட்பத்தில் அதன் பில்டர்களில் தாவர அடிப்படையிலான கோட்டிங்கை பயன்படுத்தியது. இந்த தாவர அடிப்படையிலான கோட்டிங் கிருமிகள் செயலிழக்கப்படுவதை உறுதி செய்கிறது. புதிய ஏர் பியூரிபையர் டிவைஸ்களில் UB கதிர்வீச்சுகள் மற்றும் OH (ஹைட்ராக்சில்) ரேடிக்கல்களையும் நிறுவனம் அடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது D-C-D (டிஆக்டிவேட்-கேப்சர்-டிஆக்டிவேட்) மெக்கானிஸத்தில் இது இயக்குகிறது.

8000 மடங்கு சிறந்த கிருமிநாசினி செயல்திறன்

8000 மடங்கு சிறந்த கிருமிநாசினி செயல்திறன்

வழக்கமான UV-அடிப்படையிலான ஏர் பியூரிபையர் டிவைஸ்களுடன் ஒப்பிடும்போது DCD மெக்கானிஸம் ஆனது 8000 மடங்கு சிறந்த கிருமிநாசினி செயல்திறனை வழங்குகிறது. புதிய தொழில்நுட்பத்தின் முக்கிய வேறுபாடு என்னவென்றால், அது காற்றில் பரவும் நோய்க்கிருமிகளையும் வைரஸ்களையும் பில்டர் செய்வதன் மூலம் செயலிழக்கச் செய்கிறது. AiRTH ஏர் பியூரிபையர் டிவைஸானது, பில்டரிங் மேம்படுத்துவதற்கு முன், அசுத்தமான காற்றுத் துகள்களுக்கு போதுமான வசிப்பிட நேரத்தை வழங்குகிறது.

IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்

புற்றுநோயாளிகளை பாதுகாக்கிறதா AiRTH

புற்றுநோயாளிகளை பாதுகாக்கிறதா AiRTH

பின்னர் அவற்றைக் கிருமி நீக்கம் செய்து காற்றை முழுமையாகச் சுத்திகரிக்கிறது. தற்போது, ​​புதிய AiRTH ஆண்டி மைக்ரோபியல் ஏர் பியூரிஃபையர்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள புற்றுநோயாளிகளை ஜலதோஷத்தில் இருந்தும், அபாயகரமான வைரஸ் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, கார்ப்பரேட் அமைப்புகளில் AiRTH ஏர் பியூரிபையர் டிவைஸ் மிகப்பெரிய பாதுகாப்பு நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

AiRTH ஏர் பியூரிஃபையர் டிவைஸின் விலை என்ன?

AiRTH ஏர் பியூரிஃபையர் டிவைஸின் விலை என்ன?

குறிப்பாக இப்போது நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டு ஊழியர்களை அழைத்து வரும் நேரத்தில் இந்த டிவைஸ் பெரியளவு பாதுகாப்பு கவசமாக அலுவலகங்களில் செயல்படுகிறது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. உண்மையில், இந்த ஏர் பியூரிபையர் டிவைஸ் அது சொல்வது போல, கோவிட்-19 வைரஸை ஒரு நிமிடத்தில் செயலிழக்கச் செய்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த புதிய ஏர் பியூரிபையர் டிவைஸ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பு காவல் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த டிவைஸ் ரூ.59,999 விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
AiRTH The New Air Purifier That Can Deactivate COVID 19 Virus In Less Than a Minute

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X