Home
Gadgets

இறங்கி அடிச்ச Airtel.. Tap and Pay வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது.. என்ன விலை?

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஆனது டேப் அண்ட் பே வசதியுடனான "தனது" புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. நாய்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட் வாட்சின் விலை நிர்ணயம் என்ன? இதன் முக்கிய அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு, காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் என்கிற பணம் செலுத்துவதற்கான புதிய வசதியை கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச்சை உருவாக்க ஏர்டெல் நிறுவனமானது நாய்ஸ் நிறுவனத்துடன் மட்டுமல்ல மாஸ்டர்கார்ட் உடனும் கூட்டு சேர்ந்துள்ளது.

Tap and Pay வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது Airtel!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட் வாட்ச் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சில், என்எப்சி (NFC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நியர்-ஃபீல்ட் கம்யூனிகேஷன் (Near-field Communication) சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஓஎஸ் (பாயின்ட் ஆஃப் சேல்) டெர்மினல்கள், ரீடெயில் அவுட்லெட் பிஓஎஸ் டெர்மினல்கள் மற்றும் பல்வேறு டச் பாயிண்ட்களில் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களை நிகழ்த்த முடியும்.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு (Savings Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.2,999 க்கு வாங்க கிடைக்கும். தகுதியான வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் இந்த ஸ்மார்ட் வாட்சை வாங்கலாம்.

Tap and Pay வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது Airtel!

இந்த ஸ்மார்ட் வாட்சை நாய்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் வாங்கலாம். ஒருவேளை உங்களுக்கென ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு இல்லை என்றால், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாகவே டிஜிட்டல் பேங்க் அக்கவுண்ட்டை திறக்க வேண்டும்; பின்னர் இந்த ஸ்மார்ட்வாட்சை ஆர்டர் செய்யலாம்.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட் வாட்ச் வழியாக காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் செய்வது எப்படி? முதலில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வழியாக தங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட்டை இந்த ஸ்மார்ட் வாட்ச் உடன் லிங்க் (Link) செய்ய வேண்டும்.

Tap and Pay வசதியுடன் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது Airtel!

லிங்க் செய்த பின்னர், பயனர்கள் டேப் அண்ட் பே வசதியுடன் பிஓஎஸ் இயந்திரங்களுக்கு அருகாமையில் ஸ்மார்ட் வாட்சை டேப் செய்வதன் மூலம் பணம் செலுத்த முடியும். ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தி பயனர்கள் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரை பணம் செலுத்தலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட் வாட்ச்சின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் (550 nits brightness) உடனான 1.85-இன்ச் அளவிலான டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளேவை (TFT LCD Display) கொண்டுள்ளது. மேலும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கையும் (IP68 Rating) கொண்டுள்ளது.

பிளட் ஆக்ஸிஜன் லெவலை அளவிடுவதற்கான எஸ்பிஓ2 மானிட்டர் உடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்சில் 130 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்களும் உள்ளது. கடைசியாக ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட் வாட்ச் ஆனது பிளாக் (Black), க்ரே (Grey) மற்றும் ப்ளூ (Blue) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு "10ஜிபி போனஸ் டேட்டா" சலுகையை அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையின் கீழ் (தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்) ரூ.209-ஐ க்கு மேல் உள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது 10ஜிபி டேட்டா கூப்பன்கள் இலவசமாக கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த போனஸ் டேட்டா சலுகையின் கீழ் 3 கூப்பன்கள் வரை வழங்கப்படும். ஏர்டெல் வழங்கும் இந்த போனஸ் டேட்டா கூப்பனை பெற தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. அதாவது எல்லாருக்குமே இந்த போனஸ் டேட்டா சலுகை கிடைக்காது என்று அர்த்தம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Payments Bank Smart Watch with Tap and Pay Feature Launched Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X