Home
Gadgets

AirPods Pro 3 அறிமுகம்.. IP57 ரேட்டிங், லைவ் டிரான்சிலேஷன், ANC-னு வாய்பிளக்க வைத்த Apple.. என்ன விலை?

ஆப்பிளின் ஐபோன் 17 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் அதன் ஹைஎண்ட் வயர்லெஸ் இயர்பட்ஸின் புதிய ஜெனரேஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிளின் புதிய ஏர்போட்ஸ் ப்ரோ 3 மாடல் ஆனது என்ன மாதிரியான வடிவமைப்பு மாற்றங்களை கொண்டுள்ளது? சவுண்ட் டிபார்ட்மென்ட்டில் என்னென்ன மேம்பாடுகளை கொண்டு வருகிறது? ஆப்பிள் இன்டலிஜென்ஸால் ஆதரிக்கப்படும் புதிய அம்சங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

AirPods Pro 3 அறிமுகம்.. IP57 ரேட்டிங், லைவ் டிரான்சிலேஷன், ANC!

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 3 மாடல் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை:
- ஐபி57 ரேட்டிங்
- லைவ் டிரான்சிலேஷன்
- ஹார்ட் ரேட் சென்சார்
- உலகின் மிகசிறந்த ஏஎன்சி
- ஏஎன்சி உடன் 8 மணிநேர பேட்டரி
- ஹியரிங் மோட் உடனான டிரான்ஸ்பிரன்ஸி-இல் 10 மணிநேர பேட்டரி
- விலை $249 (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.22,000)
- செப்.19 முதல் விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 3 மாடல் விரிவான அம்சங்கள்: டிசைனை பொறுத்தவரை ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் ஆனது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காற்றோட்ட அமைப்பை வழங்குகின்றன, இது நாய்ஸ் கேன்சலேஷன் செய்வதை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் அதே வேளையில் தெளிவான ஆடியோவையும் வழங்க முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

AirPods Pro 3 அறிமுகம்.. IP57 ரேட்டிங், லைவ் டிரான்சிலேஷன், ANC!

ஏர்போட்ஸ் ப்ரோ 3 மாடல் ஆனது முந்தைய ஜெனரேஷன் மாடலை விட இரண்டு மடங்கு நாய்ஸ் கேன்சலேஷனை வழங்குகிறது என்றும், அதே நேரத்தில் ஒரிஜினல் ஏர்போட்ஸ் ப்ரோவை விட நான்கு மடங்கு வலிமையானது என்றும் ஆப்பிள் கூறுகிறது. இந்நிகழ்வின் போது, ​​ஆப்பிள் தனது புதிய இயர்போன்ஸ் ஆனது இதுவரை உருவாக்கிய மிகவும் மேம்பட்ட இன்-இயர் ஹெட்ஃபோன்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக், இந்த புதிய மாடல் - இந்த வகையில் பல வருட முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறினார். "இன்று நாங்கள் இந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறோம், மேலும் அடுத்த தலைமுறை ஏர்போட்ஸ் ப்ரோவை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஆடியோ தரத்தில் எங்கள் தலைமையை விரிவுபடுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.

இந்த இயர்பட்ஸ் மாடலின் மற்றொரு முக்கிய அம்சம் - நேரடி மொழிபெயர்ப்பு ஆகும், இது ஆப்பிள் இன்டலிஜென்ஸால் இயக்கப்படுகிறது. பயனர்கள் ஒரு எளிய சைகை மூலம் இந்த அம்சத்தை செயல்படுத்தலாம், மேலும் இந்த அமைப்பு பேச்சை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும்.

இதன்கீழ் இயர்பட்ஸ் ஆனது ஸ்பீக்கரின் அசல் குரலின் அளவை குறைத்து, சிறந்த தெளிவுக்காக மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பை சத்தமாக மாற்றும். இரண்டு பேர் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 அணிந்திருக்கும் போது இது இரு வழிகளிலும் செயல்படும் என்றும் ஆப்பிள் கூறுகிறது. இது வெவ்வேறு மொழிகளில் உரையாடல்கள் மிகவும் இயல்பாக அமைய அனுமதிக்கிறது. மொழிபெயர்ப்புகளை ஐபோன் ஸ்க்ரீனில் காட்டலாம் அல்லது சத்தமாகவும் வாசிக்க வைக்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் ஐஓஎஸ் 26 மூலம் அதன் பரந்த அளவிலான ஏர்பாட்ஸ் சீரீஸ் மாடல்களுக்கு கூடுதல் அம்சங்களையும் வெளியிடுகிறது. இந்த அப்டேட் வந்தவுடன், ஏர்பாட்ஸ் ஆனது ஐபோனுக்கான கேமரா ரிமோட்டாக செயல்படும்.

ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 (AirPods Pro) ஆகிய மாடல்களில் ஸ்டுடியோ-குவால்ட்டி ஆடியோ ஆதரவும் வருகிறது, இது மியூசிக், வீடியோக்கள் மற்றும் பாட்காஸ்ட்களுக்கான பிளேபேக்கை மேம்படுத்துகிறது. அழைப்பு தரமும் மேம்படுத்தப்படும், மேலும் சார்ஜ் செய்வதற்கான நினைவூட்டல்கள் மற்றும் ஒரு பயனர் தூங்கும்போது அதை கண்டறியும் ஆட்டோ-பாஸ் அம்சமும் சேர்க்கப்படும்.

Best Mobiles in India

English summary
AirPods Pro 3 Launched in Apple Awe Dropping Event Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X