மார்ச் 25 - ஆப்பிள் ஸ்பெஷல் ஈவென்ட்: என்ன அறிமுகம் செய்யப்போறாங்க தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பின்படி வரும் மார்ச் 25 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் இல் இந்த ஸ்பெஷல் ஈவென்ட் நிகழும் என்று அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்பெஷல் ஈவென்ட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பின்படி வரும் மார்ச் 25 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் இல் இந்த ஸ்பெஷல் ஈவென்ட் நிகழும் என்று அறிவித்துள்ளது.

ஆப்பிள் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை
ஆப்பிள் நிறுவனம் அதன் அசல் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையைத் தொடங்கப் போவதாக வதந்திகள் பரவிக்கொண்டிருந்தது. தற்பொழுது அந்த வதந்திகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அசல் உள்ளடக்கத்தை வழங்குவதற்காகப் பல உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஆப்பிள் நிறுவனம் ஒரு தொகுக்கப்பட்ட செய்தி சந்தா சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் 2
ஆப்பிள் நிறுவனம், அதன் முதல் ஆப்பிள் ஏர்போட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் இன் வெற்றியைத் தொடர்ந்து புதிய சுகாதார அம்சங்களுடன் கூடிய புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஐபேட் மினி
இந்த நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இரண்டு ஐபேட் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட்களில் ஒன்று நெஸ்ட் ஜென் வெர்ஷனாக இருக்கக் கூடுமென்றும், இன்னொரு மாடல் ஐபேட் மினியின் வெற்றியைத் தொடர்ந்து வெளியிடப்படும் அடுத்த மாடல் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

7ஆம் ஜென் ஐபாட்
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபாட் தளத்தைப் புதுப்பிக்கும் வகையில் புதிய 7ஆம் ஜென் ஐபாட்களை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஐபாட் பற்றிய தகவல்கள் இன்னும் சரிவரத் தெரியவில்லை.

ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் மேட்
ஆப்பிள் நிறுவனம், ஒருவழியாக அதன் ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் மேட்டை இந்த நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்ற தகவல்கள் கசிந்துள்ளது. ஆப்பிள் ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் மேட் 2017 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஸ்பெஷல் ஈவென்ட்
இந்த ஏர்பவர் வயர்லெஸ் சார்ஜிங் மேட் ஐபோன், வாட்ச், ஏர்போட்ஸ் மற்றும் ஆப்பிள் வயர்லெஸ் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications