Home
Gadgets

ரூம் முதல் ரிமோட் வரை.. புது Air Cooler வாங்கும் போது இதெல்லாம் செக் பண்ணலனா.. வாங்கியும் வேஸ்ட்டு தான்!

வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதுவும் மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், இரவு நேரத்தில் நேரத்தில் புழுக்கத்தினால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அதேபோல் இந்த கொளுத்தி எடுக்கும் வெயிலை கருத்தில் கொண்டு தேவையின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் ஏர் கூலர்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

புது Air Cooler வாங்கும் போது இதெல்லாம் மறக்காம செக் பண்ணுங்க!

ஆனால் ஏர் கூலர்களை (Air cooler) வாங்கும் முன்பு சில முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெர்சனல் மற்றும் டெசர்ட்: ஏர் கூலர்களை வாங்கும் முன்பு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறைகளுக்கு, பெர்சனல் கூலர்களை (Personal coolers) தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் பெரிய அறைகளுக்கு, டெசர்ட் கூலர்களை (Desert coolers) தேர்வு செய்வது நல்லது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள அறையில் பெர்சனல் கூலர்களை வைக்கலாம். 300 சதுர அடிக்கு மேல் உள்ள அறையில் டெசர்ட் கூலர்களை வைக்கலாம்.

தண்ணீர் தொட்டி திறன்: அதேபோல் ஏர் கூலர்களில் தண்ணீர் தொட்டியின் திறன் பற்றி முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும். கூலர்களின் அளவு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அதே அளவு தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். மிகவும் சிறிய அறைகள் 15 லிட்டர் தொட்டி கொண்ட ஏர் கூலர்களை வாங்குவது நல்லது.

அதேபோல் நடுத்தர நடுத்தர அளவிலான அறைகள் இருக்கிறது என்றால் 25 லிட்டர் தொட்டி கொண்ட ஏர் கூலர்கள் வாங்க வேண்டும். பெரிய அறைகள் என்றால் 40 லிட்டர் மற்றும் அதற்கு மேல் கெப்பாசிட்டி கொண்ட ஏர் கூலர்கள் வாங்க வேண்டும்.

புது Air Cooler வாங்கும் போது இதெல்லாம் மறக்காம செக் பண்ணுங்க!

ஏர்கூலர் வைக்க வேண்டிய இடம் எது? குறிப்பாக அறைக்கு வெளியே அல்லது உங்களது கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டைமாடியில் ஏர் கூலர்களை வைக்க விரும்பும் பயனர்கள் டெசர்ட் கூலரை(Desert coolers)வாங்கலாம். உட்புற பயன்பாடுகளுக்கு பெர்சனல் (personal) அல்லது டவர் (Tower) கூலர்ஸ் வாங்குவது மிகவும் நல்லது.

ஈரப்பதம்: வறண்ட கால நிலைகளில் டெசர்ட் கூலர்ஸ் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஈரப்பதமான பகுதிகளுக்கு பெர்சனல் அல்லது டவர் கூலர்ஸ் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரைச்சல் அளவு: ஏர் கூலர்களை வாங்கும் முன்பு முக்கியமாக கவனிக்க வேண்டியது சத்தம் தான். அதாவது சில கூலர்கள் மிகவும் சத்தமாக இருக்கும். எனவே நீங்கள் கடையில் கூலர்களை வாங்குவதற்கு முன்பு அதன் இரைச்சல் அளவை கண்டிப்பாகச் சரி பார்க்க வேண்டும். பின்பு அதன் அளவை அதிகபட்ச விசிறி வேகத்தில் சரிபார்க்க வேண்டும்.

ஆட்டோஃபில்: ஏர் கூலர்களில் அடிக்கடி தண்ணீர் நிரப்புவது ஒரு சிக்கலான வேலையாகும். எனவே ஆட்டோஃபில் செயல்பாட்டை வழங்கும் (auto fill function) ஏர் கூலர்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக இதுபோன்ற ஏர்கூலர்ககள் சிறந்த குளிரூட்டலை வழங்கும். மேலும் ஆட்டோஃபில் அம்சம் தொட்டியை முழுமையாக உலர விடாமல் தடுக்கும். எனவே மோட்டார் சேதமடைவதைத் தடுக்க முடியும்.

தேன்கூடு கூலிங் பேட்கள்: குறிப்பாக குளிரூட்டும் பேட்கள் கூலரின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அதாவது கூலர்களுக்கு பல்வேறு வகையான கூலிங் பேட்கள் உள்ளன. அதாவது கம்பளி மரம் (wool wood), ஆஸ்பென் பட்டைகள் (aspen pads) மற்றும் தேன்கூடு பட்டைகள் (honeycomb pads) ஆகியவை மிகவும் பொதுவானவை ஆகும். ஆனாலும் இதில் தேன்கூடு கூலிங் பேட்கள் மற்ற இரண்டையும் விடவும் சிறந்தது ஆகும் ஏனெனில் இது நீண்ட கால குளிரூட்டலை வழங்குகின்றன.

ஜஸ் சேம்பர்: வேகமான கூலிங் வசதிக்கு சில உற்பத்தியாளர்கள் கூலர்களுக்கு ஒரு பிரத்யேக ஜஸ் சேம்பரை சேர்த்துள்ளனர். மேலும் தொட்டியிலும் உள்ள தண்ணீரை விரைவாகக் குளிர்விக்க நீங்கள் அவற்றில் நீங்கள் அவற்றில் ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புது Air Cooler வாங்கும் போது இதெல்லாம் மறக்காம செக் பண்ணுங்க!

இன்வெர்ட்டர்: இப்போது வரும் நவீன ஏர் கூலர்கள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. எனவே மின்வெட்டு ஏற்பட்டால் இன்வெர்ட்டர்களில் கூட இந்த ஏர்கூலர்கள் இயங்கும்.

ரிமோட் கண்ட்ரோல்: அதிநவீன ஏர் கூலர்கள் ரிமோட் கண்ட்ரோல், anti mosquito, டஸ்ட் ஃபில்டர் போன்ற கூடுதல் அம்சங்களை வழங்குகின்றன. எனவே இது போன்ற அம்சங்களைக் கொண்ட ஏர் கூலர்களை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Air cooler buying guide: Here are 10 things you should not miss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X