அறிமுகமானது புதிய Ai+ PulseTab.. 8000mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. 13எம்பி கேமரா.. என்ன விலை?
இந்தியாவில் ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் (Ai+ PulseTab) மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே, 8000எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் அம்சங்கள் (Ai Plus PulseTab Specifications): 10.95-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,200x1,920 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate),400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்(octa-core MediaTek Helio G88 chipset) உடன் இந்த ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இதில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
13எம்பி ரியர் கேமரா உடன் ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
8000mAh பேட்டரி உடன் ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
குவாட் ஸ்பீக்கர்கள் (quad speakers) இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். மேலும் வைஃபை, 4ஜி எல்டிஇ உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏஐ பிளஸ் பல்ஸ் டேப் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. வரும் மே மாதம் முதல் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photos credits: via YouTube/ @AiPlus_Official, YouTube/ Ai+, beebom


Click it and Unblock the Notifications








