Home
Gadgets

யாரு விடுவா சொல்லுங்க? ரூ.15,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. 5ஜி.. இன்று விற்பனை.. எந்த போன்?

கடந்த வாரம் இந்தியாவில் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி (Ai Plus Nova 2 Power 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளியானது.

இந்நிலையில் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இன்று இரவு 11.59 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

யாரு விடுவா? ரூ.15,999 பட்ஜெட்ல 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த போன்?

ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999-ஆக உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி மாடலை ரூ.15,999 விலையில் வாங்க முடியும். ப்ளூ ஃப்யூஷன், ப்ளூ கோல்ட் ஃப்யூஷன், டீப் ப்ளூ, மிட்நைட் பிளாக், க்ரீன் ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி அம்சங்கள் (Ai Plus Nova 2 Power 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7100 சிப்செட் (MediaTek Dimensity 7100 chipset)உடன் புதிய ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனில் Arm Mali-G610 MC2 கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

அதேபோல் 6.75-இன்ச் எச்டி பிளஸ் LCD டிஸ்பிளேவுடன் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1570 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

அதுவும் பாட்டம்-ஃபயரிங் ஸ்பீக்கர் (Bottom-firing Speaker) ஆதரவு இந்த புதிய ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி மாடலில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவும் இந்த மாடலில் உள்ளது.

48எம்பி ஏஎப் சோனி ஐஎம்எக்ஸ்582 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யாரு விடுவா? ரூ.15,999 பட்ஜெட்ல 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த போன்?

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஏஐ பிளஸ் நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் வி5.4, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Ai Plus Nova 2 Power 5G on sale today for the first time in India: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X