வெறும் ரூ.11,490 முதல்.. டால்பி அட்மாஸ், 16ஜிபி ஸ்டோரேஜ்.. அறிமுகமானது Acer டிவிகள்.. எந்த மாடல்?
ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர்பியூர் ஆஸ்பியர் மற்றும் ஸ்விஃப்ட் (Acerpure Aspire and Swift) பெயரில் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 32-இன்ச், 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவுகளில் இந்த புதிய டிவி வாங்க கிடைக்கும். குறிப்பாக டால்பி அட்மாஸ், பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஏசர்பியூர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏசர்பியூர் டிவி சீரிஸ் அம்சங்கள் (Acerpure TV Series Specifications): 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே அல்ட்ரடி எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. அதேபோல் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 32-இன்ச் ஸ்மார்ட் டிவி எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏசர்பியூர் டிவிகள் பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளன.

குறிப்பாக ஏசர்பியூர் டிவி மாடல்கள் 178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle) ஆதரவை வழங்குகின்றன. மேலும் 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவை வழங்குகின்றன. மேலும் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) வழங்கும் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
ஏசர்பியூர் டிவி சீரிஸ் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
அதன்படி ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor) வசதியைக் கொண்டுள்ளன இந்த ஏசர்பியூர் டிவி மாடல்கள். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளன இந்த டிவிகள். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய டிவிகளை நம்பி வாங்கலாம்.
கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன இந்த ஏசர்பியூர் டிவி சீரிஸ் மாடல்கள். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புத்தம் ஸ்மார்ட் டிவிகள். மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள். பின்பு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன ஏசர்பியூர் டிவி சீரிஸ்.
ஏசர்பியூர் 32-இன்ச் டிவியின் விலை ரூ.11,490-ஆக உள்ளது. பின்பு இதன் 43-இன்ச் டிவி ரூ.20,990 விலையிலும், 55-இன்ச் டிவி ரூ.35,999 விலையிலும், 65-இன்ச் டிவி ரூ.49,999 விலையில் வாங்க முடியும். குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ஏசர் பிரத்யேக ஸ்டோர்களிலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








