Home
Gadgets

100-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Acerpure.. 32ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. என்ன விலை?

ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர்பியூர் (Acerpure) எனும் பெயரில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த புதிய ஏசர்பியூர் டிவிகள் வெளிவருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டிவிகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் 100-இன்ச் கொண்ட ஏசர்பியூர் Nitro Z ஸ்மார்ட் டிவி சீரிஸ் (Acerpure Nitro Z Series 100 4K QLED Google TV ) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

100-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Acerpure.. 32ஜிபி மெமரி.. என்ன விலை?

ஏசர்பியூர் Nitro Z சீரிஸ் அம்சங்கள் (Acerpure Nitro Z Series 100 inch TV Specifications): 100-இன்ச் கொண்ட ஏசர்பியூர் Nitro Z சீரிஸ் டிவி ஆனது க்யூஎல்இடி (QLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), டால்பி விஷன் ( Dolby Vision), எச்டிஆர் 10 ( HDR10) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 400 நிட்ஸ் பிரைட்னஸ் (400 nits brightness), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் இந்த புதிய 100-இன்ச் ஏசர்பியூர் Nitro Z சீரிஸ் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) வசதியும் இந்த டிவியில் உள்ளது.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), விஆர்ஆர் (VRR) போன்ற கேமிங் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் இந்த புதிய 100-இன்ச் கொண்ட ஏசர்பியூர் Nitro Z சீரிஸ் ஸ்மார்ட் டிவியில்உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த 100-இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

100-இன்ச் டிவியை அறிமுகம் செய்த Acerpure.. 32ஜிபி மெமரி.. என்ன விலை?

கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது ஏசர்பியூர் Nitro Z சீரிஸ். ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 100-இன்ச் ஏசர்பியூர் Nitro Z சீரிஸ் மாடலில் உள்ளன. மேலும் இந்த டிவியின் விலை ரூ.2,59,999-ஆக உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த 100-இன்ச் டிவியை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Acerpure Nitro Z Series 100 inch QLED TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X