மட்ட ரேட்ல கேமிங் டிவி.. ரூ. 18,999 முதல்.. QLED டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ்.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
ஏசர்ப்யூர் நிறுவனத்தின் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி (Nitro Series Gaming TV) மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கான கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி விஷன், எம்இஎம்சி, ஏஎல்எல்எம், விஆர்ஆர் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.
43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே வரையில் இந்த கேமிங் சீரிஸ் மாடல்கள் இருக்கின்றன. பட்ஜெட் மாடல்களாக இருப்பதால், கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏசர்ப்யூர் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி அம்சங்கள் (Acerpure Nitro Series Gaming TV Specifications): இந்த நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. இதுபோக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆகவே, அப்டேட்டில் பீச்சர்கள் கிடைக்கும்.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) முதல் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் குரோம்காஸ்ட் (Chromecast) போன்ற பீச்சர்களும் இந்த ஓஎஸ் மூலம் கிடைக்கும். ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), அமேசான் பிரைம் (Amazon Price) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் மற்றும் கேமிங் ஆப்களை பயன்படுத்தலாம்.
பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-less Design) 43 இன்ச் டிஸ்பிளேவில் இருந்து கிடைக்க இருக்கிறது. அதேபோல 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிஸ்பிளே மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. இந்த கியூஎல்இடி (QLED) டிஸ்பிளேவில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களும் கிடைக்கின்றன. இதுபோக ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஏஐபிகியூ (AIPQ) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, கலர் அக்கியூரசி மற்றும் நேச்சுரல் வியூவிங் அனுபவம் எதிர்பார்க்கலாம். இதில் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளே பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) மற்றும் மோஷன் எஸ்டிமேஷன் மோஷன் கம்பென்சேஷன் (Motion Estimation Motion Compensation) ஆகிய கேமிங் பீச்சர்களையும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி மாடல்கள் கொடுக்கின்றன.
அதேபோல முன்பு பார்த்த ஏஐ பிக்சர் குவாலிட்டி (AI Picture Quality) கிடைப்பதால், பிரீமியம் கேமிங் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதுபோக கேமிங் பேட் (Gaming Pad) கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோவிலும் குறையில்லாமல், இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி மாடல்கல் இருக்கின்றன. 50W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது.
இந்த ஆடியோவுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. வயர்லெஸ் கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில் டூயல்-பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது. அதேபோல வழக்கமாக கிடைக்கும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்களும் கிடைக்கின்றன.
ஸ்மார்ட் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் ரிமோட் ஃபைண்டர் கிடைக்கிறது. இந்த டிவிகளுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ சீரிஸ் கேமிங் டிவி மாடல்களின் ஆரம்ப விலை ரூ.18,999ஆக இருக்கிறது. கேமிங் டிவிகளில் மலிவு விலை மாடல்களாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications