செம்ம டிமாண்ட்.. பட்ஜெட்ல 75 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி அட்மோஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு மாடல்களை களமிறக்க வரும் ஏசர்ப்யூர் நிறுவனத்தின் ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 (Acerpure Nitro QLED TV 2026) மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை உள்ளிட்ட இப்போது விவரங்களை பார்க்கலாம்.
75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் டிஸ்பிளேவில் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ

ஏனென்றால், ஆட்டோ லோவ் லேட்டன்சி (Auto Low Latency Mode), மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் கம்பென்சேஷன் (Motion Estimation, Motion Compensation) கிடைக்கிறது. இதுபோக வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) கொண்ட மாடல்களாகவும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
100 இன்ச் டிஸ்பிளேவுக்கு ஏற்ப 65W சவுண்ட் அவுட்புட் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் கொடுத்து இருப்பதால், பிரீமியம் ஆடியோ அனுபவத்தை பெற்று கொள்ளலாம். இதுபோக 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் ஆகிய மூன்று மாடல்களுக்கும் இன்-பில்ட் கரோக்கி சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது?
ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 அம்சங்கள் (Acerpure Nitro QLED TV 2026 Specifications): 75 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே, 85 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் 100 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே கொண்ட மாடல்களில் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 கிடைக்கிறது. 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன் கிடைப்பதால், பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR 10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC), விஆர்ஆர் (VRR) உள்ளிட்ட பீச்சர்களை இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV 5.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் குரோம்காஸ்ட் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாஸ்டார் (Jio Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ கியூஎல்இடி டிவி 2026 மாடல்கள் கொடுக்கின்றன. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது.
இதில் கரோக்கி சப்போர்ட் கிடைக்கிறது. ஆடியோவை பார்க்கையில், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களில் 40W சவுண்ட் அவுட்புட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. 100 இன்ச் மாடலில் மட்டும் 65W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டால்பி அட்மோஸ் ( Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
2 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வருகிறது. 3 எச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி போர்ட் உள்ளது. வை-பை, ப்ளூடூத் கிடைக்கிறது. 75 இன்ச் மாடலின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. 85 இன்ச் மாடலின் விலை ரூ.99,999ஆக இருக்கிறது. மேலும், 100 இன்ச் டிஸ்பிளே கொண்ட டாப் எண்ட் மாடலின் விலை ரூ.1,89,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
