மொத்த ஆர்டரும் ஒத்த டிவிக்கு.. 67 சதவீத ஆஃபரில் 65 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV ஓஎஸ்.. எந்த மாடல்?
ஏசர் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி (Acerpure Nitro 65 inch QLED TV) மாடலுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. டால்பி விஷன், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவியின் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.50,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 65 இன்ச் டிவிகள் கிடைத்தாலும், ஆடியோ மற்றும் வீடியோ பீச்சர்களில் பிரீமியம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி டால்பி ஆடியோ மற்றும் டால்பி விஷன் கொடுத்து உள்ளது. மேலும், விஆர்ஆர், எம்இஎம்சி உள்ளிட்ட பீச்சர்கலையும் கொடுத்து உள்ளது.

கரோக்கி அவுட்புட் எடுத்து கொள்ளலாம். கேமிங் பேட் கனெக்டிவிட்டி போன்ற கேமிங் பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 67 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.36,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
நைட்ரோ சீரிஸ் (Nitro Series) மற்றும் ஏபி65யுஜி75பிஎன்டி05 (AP65UG75PNTO5) மாடலின் கீழ் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருடத்துக்கு வாரண்டி கிடைக்கும். பெசல்-லெஸ் டிசைனில் கிடைக்கிறது. 2025 எடிஷனாக இருக்கிறது. லேட்டஸ்ட் பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.
ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Acerpure Nitro 65 inch QLED TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஏஐபிகியூ சிப்செட்டை (AIPQ Chipset) இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கொடுத்து உள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 மெமரியை கொடுத்து உள்ளது. 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொடுக்கிறது. அல்ட்ரா எச்டி 4கே ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. விஆர்ஆர் (VRR), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) மற்றும் வைடு கலர் காமட் (Wide Color Gamut) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR 10) மற்றும் ஐ கேர் மோட் (Eye Care Mode) ஆகிய பீச்சர்களையும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 65 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்து உள்ளது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் பேக் செய்யப்பட்டு உள்ளன. 50 W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.
பில்ட்-இன் கரோக்கி (Built-in Karaoke) கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஈதர்நெட் (Ethernet), கேம் மோட் (Game Mode), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) மற்றும் வயர்லெஸ் ரெடி (Wireless Ready) கனெக்டிவிட்டிகள் உள்ளன. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications







