மிரள விடும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் 43 இன்ச் 4கே டிவி.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. HDR 10.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்க முடியும்.

ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Acerpure Nitro 43 inch QLED 4K Google TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ஏசர்ப்யூர் நைட்ரோ டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
விஆர்ஆர் (VRR), மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) மற்றும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) போன்ற அம்சங்களும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளன.
ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

குறிப்பாக டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 50W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
அதுவும் யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர்ப்யூர் நைட்ரோ டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








