2025 ஆரம்பமே Acer அதிரடி.. டால்பி அட்மாஸ்.. பெசல் லெஸ் டிசைன்.. ஆரம்ப விலை ரூ.11,999.. புதிய டிவிகள் அறிமுகம்!
ஏசர் (Acer) நிறுவனம் ஏசர்பியூர் ஆஸ்பயர் மற்றும் ஸ்விஃப்ட் டிவி சீரிஸ் (Acerpure Swift and Aspire TVs) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது புதிய ஏசர் டிவி மாடல்களின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏசர்பியூர் ஆஸ்பயர் மற்றும் ஸ்விஃப்ட் டிவி சீரிஸ் அம்சங்கள் (Acerpure Aspire and Swift TVs specifications): ஏசர் ஆஸ்பியர் மற்றும் ஸ்விஃப்ட் டிவிகள் 3840 X 2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் 1.0 பில்லியன்ஸ் கலர்ஸ், பெசல் லெஸ் டிசைன், 78 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) போன்ற அம்சங்களும் இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன.

அதேபோல் 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச், 5-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவுகளில் இந்த புதிய ஏசர் டிவிகள் கிடைக்கின்றன. இதில் சில டிவிகள் 4கே ரெசல்யூஷன் ஆதரவுடன் வெளிவந்துள்ளன. குறிப்பாக இதில் சில டிவிகள் எச்டி டிஸ்பிளே மற்றும் சில டிவிகள் ஃபுல் டிஸ்பிளே ஆதரவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)மூலம் இந்த புதிய டிவிகள் இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவிகளில் உள்ளன.
குறிப்பாக ஏசர்பியூர் ஸ்விஃப்ட் டிவி சீரிஸ் டால்பி ஆடியோ ஆதரவுடன் வெளிவந்துள்ளன. மேலும் ஏசர்பியூர் ஆஸ்பயர் டிவி மாடல்கள் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு கேமிங் அம்சங்களுடன் வெளிவந்துள்ளன இந்த புதிய ஏசர்பியூர் ஆஸ்பயர் மற்றும் ஸ்விஃப்ட் டிவி சீரிஸ் மாடல்கள். அதேபோல் இந்த டிவிகளுடன் ஸ்மார்ட் ரிமோட் ரிமோட் ஒன்று கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது.

எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், புளூடூத் வி5.0, டூயல் பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் ஆஸ்பயர் மற்றும் ஸ்விஃப்ட் டிவி சீரிஸ் மாடல்கள். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிரபலமான ஏசர் நிறுவனம்.
ஏசர்பியூர் ஆஸ்பியர் மற்றும் ஸ்விஃப்ட் சீரிஸ் டிவிகளின் ஆரம்ப விலை ரூ.11,299-ஆக உள்ளது. 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மாடல்களில் விலை சற்று உயர்வாக இருக்கும்.குறிப்பாகப் பயனர்கள் அமேசான் தளத்தில் இந்த புதிய ஏசர் டிவிகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








