பிளிப்கார்ட் அதிரும்.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி..
பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே டிவி (acerpure Aspire TV 4K 43) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality), டால்பி அட்மாஸ் ஆதரவு, 16ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசர்பியூர் ஆஸ்பியர் 4கே டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஏசர்பியூர் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.19999 விலையில் வாங்கிட முடியும்.

43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே அம்சங்கள் (acerpure Aspire 43 inch 4K Smart Google TV Specifications): டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த அடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
குறிப்பாக அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
அதன்படி 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல். மேலும் இந்த டிவியில் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவி ஒரு சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய டிவியை நம்பி வாங்கலாம்.

கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஏசர்பியூர் டிவி மாடல். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல்.
மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல். எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications








