75 இன்ச் 4K QLED ஏசர்பியூர் டிவி அறிமுகம்.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. என்ன விலை?
ஏசர் நிறுவனம் தனது ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் 65 மற்றும் 75 இன்ச் 4கே கியூஎல்இடி டிவிகள் (Acerpure Advance G Series 65″ and 75″ 4K QLED TVs) மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் அம்சங்கள் (Acerpure Advance G Series 4K QLED TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் பிரேம்லெஸ் மெட்டல் டிசைன் உடன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே QLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் 3840×2160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), 1.07 பில்லின் கலர்ஸ் (1.07B colors), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.
எம்இஎம்சி (MEMC)என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)ஆதரவும் இந்த ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் மாடலில் உள்ளது. பின்பு மேம்பட்ட பிரைட்னஸ் மற்றும் கான்ட்ராஸ்ட் சப்போர்ட் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் டிவிகள் இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட சப்வூப்பர் (Subwoofer) ஸ்பீக்கர்கள் உடன் ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளில் மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.

பில்ட்-இன்-குரோம்காஸ்ட் ஆதரவு இந்த புதிய 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. மேலும் வைஃபை, ப்ளூடூத், 3 எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், லேன், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் மாடலில் உள்ள.
ஏசர்பியூர் அட்வான்ஸ் ஜி சீரிஸ் 65-இன்ச் டிவியின் விலை ரூ.54,999-ஆக உள்ளது. பின்பு இதன் 75 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.79,999-ஆக உள்ளது. ஏசர்பியூர் ஆன்லைன் ஸ்டோர் (Acerpure Online Store), ஏசர் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர் (Acer Exclusive Stores) போன்ற தளங்களில் இந்த புதிய ஸமார்ட் டிவிகள் வாங்கக் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








