Home
Gadgets

அசரவைக்கும் பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ஏசர்பியூர் ஏசர் Elevate டிவி ஆனது தற்போது சலுகை வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி அட்மாஸ், கூகுள் டிவி ஓஎஸ், எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் 50 இன்ச் கொண்ட ஏசர்பியூர் ஏசர் Elevate டிவிக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.25,999 விலையில் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.24,499 விலையில் வாங்கிவிட முடியும்.

அசரவைக்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்

50 இன்ச் ஏசர்பியூர் ஏசர் Elevate டிவி அம்சங்கள் (Acer Elevate 50 inch 4K Smart Google TV Specifications): 50 இன்ச் கொண்ட ஏசர் டிவி ஆனது கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 (HDR 10), 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதுவும் இந்த டிவியில்கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology). குறிப்பாக இது மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். பின்பு பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த போன் வெளிவந்தது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த 50 இன்ச் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டால்பி அட்மாஸ் (Doby ATMOS) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் இந்த 50 இன்ச் ஏசர்பியூர் ஏசர் Elevate டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உடன் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் ,வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது. அதாவது இந்த வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ரிமோட்.

அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த 50 இன்ச் ஏசர் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த 50 இன்ச் டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
acerpure Acer Elevate 50 inch 4K Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X