அடித்து தூள் கிளப்பிய பிளிப்கார்ட்.. ரூ.15,549 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று மிகவும் கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் AP50UG51ASFTD என்ற மாடல் நம்பர் கொண்ட 50 இன்ச் ஏசர்பியூர் ஏசர் Elevate டிவி (acerpure Acer Elevate 50 inch 4K Smart Google TV) மாடலுக்கு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,049 விலையில் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.15,549 விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர்பியூர் ஏசர் Elevate 50 இன்ச் டிவி அம்சங்கள் ( acerpure Acer Elevate 50 inch 4K Smart Google TV Specifications): தரமான டால்பி அட்மாஸ் (Doby ATMOS) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் இந்த 50 இன்ச் ஏசர்பியூர் ஏசர் Elevate டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உடன் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடலில் குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 50 இன்ச் கொண்ட ஏசர் டிவி ஆனது கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 (HDR 10), 1.07 பில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) இந்த டிவியில் உள்ளது. இது மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். பின்பு பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த போன் வெளிவந்தது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

அதுவும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த 50 இன்ச் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் ,வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் வருகிறது. அதாவது இந்த வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ரிமோட்.


Click it and Unblock the Notifications








