Home
Gadgets

பிரீமியம் லுக்.. 16ஜிபி மெமரி.. கூகுள் டிவி OS.. 40W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ஏசர்பியூர் (acerpure) 43 இன்ச கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி டால்பி விஷன், 40று ஸ்பீக்கர்கள், 16ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் ஏசர்பியூர் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (acerpure 43 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிரீமியம் லுக்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ஏசர்பியூர் 43 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி அம்சங்கள் (acerpure 43 inch QLED 4K Smart Google TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி (Ultra HD) 4கே டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது ஏசர்பியூர் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), 350 நிட்ஸ் பிரைட்னஸ், 350 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இதுதவிர 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10, வைடு கலர் காமட் (Wide Color Gamut), ஐ-கேர் மோட் (Eye-care Mode) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவு இந்த டிவியில் உள்ளது. பின்பு விஆர்ஆர்(VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), உள்ளிட்ட வசதிகள் உடன் ஏசர்பியூர் டிவி வெளிவந்துள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் ஏசர்பியூர் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது.கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

2ஜிபி ரேம் மற்றும்; 16ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது ஏசர்பியூர் 43 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி மாடல். அதேபோல் இந்த டிவியில் 40W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல்வேறு ஆடியோ அம்சங்களும் இந்த ஏசர்பியூர் டிவியில் உள்ளன.

பிரீமியம் லுக்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) இந்த ஏசர் டிவியில் உள்ளது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளன. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசர்பியூர் டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acerpure 43 inch QLED 4K Smart Google TV 2025 is available at discounted price on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X