கடன் வாங்காமலேயே 43 இன்ச் டிவி வாங்கலாம்! இவ்வளவு கம்மி ரேட்டுக்கு வித்தா ஃபுல் கேஷ் குடுத்துடலாமே! எந்த மாடல்
அமேசான் தளத்தில் ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Acerpure 43 inch Aspire Series Smart Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.எச்டிஆர் 10 பிளஸ், 8ஜிபி மெமரி, டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் AP43FG41AASPD என் மாடல் நம்பர் கொண்ட ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.15499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் சீரிஸ் டிவி அம்சங்கள் (acerpure 43 inch aspire Series tv Specifications): ஃபுல் எச்டி பிளஸ் எல்இடி டிஸ்பிளே உடன் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
அதேபோல் பெசல்-லெஸ் டிசைன், 178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle) ஆதரவை வழங்குகிறது ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி. மேலும் 16.7 மில்லியன் கலர்ஸ், கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் டிவி. ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor) வசதியைக் கொண்டு இந்த டிவி வெளிவந்தது. இந்த ரியல்டெக் பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் டிவி. மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த டிவி. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும்.
யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டிடிஎஸ்-எச்டி, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. மேலும் இந்த ஏசர்பியூர் டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் வருகிறது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ரிமோட்.
எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications