முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. டால்பி அட்மாஸ்..கூகுள் டிவி OS.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஏசர்பியூர் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (acerpure 43 inch Ultra HD 4K Smart Google TV) ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் AP43UG51ASFTD மாடல் நம்பர் கொண்ட ஏசர்பியூர் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர்பியூர் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (acerpure 43 inch Ultra HD 4K Smart Google TV): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
அதாவது 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவை வழங்குகிறது இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் டிவி மாடல். மேலும் இந்த டிவியில் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) கிடைக்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் ஆஸ்பியர் 4கே டிவி வெளிவந்துள்ளது. இதுதவிர ஐந்து சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்று கிடைக்கும். குறிப்பாக வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த டிவியில் உள்ளன.
கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஏசர்பியூர் டிவி மாடல். அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் டிவி 4கே மாடல்.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. ரியல்டெக் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ55 (RealTek ARM Cortex-A55) பிராசஸர் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. குறிப்பா இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர்பியூர் 4கே டிவி மாடல். எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் ஸ்மார்ட் டிவி. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








