போனா வராது.. ரூ.15,999 பட்ஜெட்ல டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 43 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?
இந்தியாவில் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவிகளை விட 4கே ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் 4கே டிவிகளை பட்ஜெட் விலையில் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் கொண்ட 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் AP43UG51ASFTD என்ற மாடல் நம்பர் கொண்ட ஏசர்பியூர் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (acerpure 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு 67 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செயய்ப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர்பியூர் 43 இன்ச் 4கே டிவி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (acerpure 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 350 நிட்ஸ் பிரைட்னஸ், உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
அதாவது 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான 43 இன்ச் ஏசர்பியூர் 4கே டிவி மாடல். மேலும் இந்த டிவியில் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டிவி ஒரு சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான ரியல்டெக் கார்டெக்ஸ் ஏ55 (RealTek, ARM Cortex-A55) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் ஸ்மார்ட் டிவி. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி31 (Mali G31) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய டிவியை நம்பி வாங்கலாம்.
அதேபோல் கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஏசர்பியூர் டிவி மாடல். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் 4கே டிவி மாடல்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏசர்பியூர் 43 இன்ச் 4கே டிவி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்று வருகிறது. அதுவும் இந்த ரிமோட்டில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் டிவி 4கே மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த அடியோ அனுபவத்தை வழங்கும்.
எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஏசர்பியூர் 43 இன்ச் 4கே டிவி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








