அதிரவிடும் விலை.. 4கே அல்ட்ரா எச்டி புரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்த Acer.. எந்த மாடல்?
ஏசர் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மறறும் லேப்டாப் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இரண்டு புதிய புரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது ஏசர் வேரோ எச்எல்6810 (Acer Vero HL6810) மற்றும் ஏசர் வேரோ எச்எல்6810ஏடிவி (Acer Vero HL6810ATV) ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்கள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புரொஜெக்டர் மாடல்களும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஏசர் வேரோ எச்எல்6810 சீரிஸ் அம்சங்கள் (Acer Vero HL6810 Series Specifications): 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் மற்றும் 3840×2160 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன ஏசர் Vero எச்எல்6810 மற்றும் ஏசர் Vero எச்எல்6810ஏடிவி மாடல்கள். மேலும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளன இந்த அசத்தலான புரொஜெக்டர் மாடல்கள்.
இவற்றில் உள்ள லேசர் (laser)எல்இடி ஹைப்ரிட் (LED hybrid) லைட் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். குறிப்பாக கேம் விளையாடும் போதும், ஸ்ட்ரீமிங் செய்யும் போதும் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் இந்த புதிய ஸ்மார்ட் ஏசர் புரொஜெக்டர்கள்.
அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ், 30000 மணி நேர லைஃப்பேன்(30,000-hour lifespan) மற்றும் 45 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்கும் திறன் கொண்டுள்ளன இந்த புதிய ஏசர் புரொஜெக்டர் மாடல்கள். குறிப்பாக இந்த இரண்டு புரொஜெக்டர்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
50,000:1 டைனாமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ ( 50,000:1 dynamic contrast ratio), 709 கலர் காமட் ( 709 color gamut), 1.3x ஜூம் ஆதரவு, HV கீஸ்டோன் ( HV keystone), 4 கார்னர் கரெக்சன் (4 corner correction) போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளன இந்த ஏசர் Vero எச்எல்6810 மற்றும் ஏசர் Vero எச்எல்6810ஏடிவி மாடல்கள்.
அதேபோல் ஏசர் வேரோ எச்எல்6810ஏடிவி(Acer Vero HL6810ATV) மாடலின் பின்புறம் ஆண்ட்ராய்டு டிவி டாங்கிள் உள்ளது. எனவே இதில் தேவையற்ற கேபிள்களுக்கு வேலை இருக்காது. மேலும் நெட்பிளிக்ஸ், யூடியூப் போன்ற பல ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு நேரடி அணுகலை வழங்குகிறது இந்த சாதனம்.
குறிப்பாக IP5X ரேட்டிங் கொண்டுள்ளன இந்த ஏசர் ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்கள். மேலும் இந்த இரண்டு சாதனங்களும் புளூலைட் ஷீல்ட் டெக்னாலஜி (BlueLight Shield technology) ஆதரவைக் கொண்டுள்ளன. இது கண்களுக்குச் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ-ரே 3D சப்போர்ட் (Blu-ray 3D support), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஏசர் Vero எச்எல்6810 சீரிஸ் (Acer Vero HL6810 Series) வெளிவந்துள்ளன. மேலும் இந்த புரொஜெக்டர் மாடல்களுடன் ஸ்பீக்கர்களை இணைத்துச் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.
ஏசர் வேரோ எச்எல்6810 (Acer Vero HL6810) மாடலின் விலை EUR 1,599 (இந்திய மதிப்பில் ரூ.1,44,448)-ஆக உள்ளது. பின்பு ஏசர் வேரோ எச்எல்6810ஏடிவி ((Acer Vero HL6810ATV) மாடலின் விலை EUR 1,699 (இந்திய மதிப்பில் ரூ.1,53,495)-ஆக உள்ளது. தற்போது இந்த இரண்டு புரொஜெக்டர் மாடல்களும் சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications








