கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 43 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?
ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவி (Acer Ultra V 43 inch 4K Google TV) மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி தரமான அம்சங்களுடன் வெளியானது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவி மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Acer Ultra V 43 inch 4K Smart Google TV Specifications): இந்த ஏசர் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 1.07 மில்லியன் கலர்ஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
டூயல் பிராசஸர் கோர் கார்டெக்ஸ் ஏ72 பிராசஸர் உடன் இந்த ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த டிவியில் உள்ளது.
மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) மற்றும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) போன்ற அம்சங்களும் இந்த ஏசர் டிவியில் உள்ளன. பின்பு எச்டிஆர் 10 அம்சமும் இந்த டிவியில் உள்ளன.
இந்த ஏசர் டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

தனித்துவமான டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த ஏசர் அல்ட்ரா வி 43 இன்ச் 4கே கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
மேலும் யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications
