ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆஃபரில் 55 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?
ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Ultra I Series 55 inch 4K Google TV) மாடல் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Acer Ultra I Series 55 inch 4K Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் டிவி. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
அதுவும் டூயல் கோர் ஏஐ பிராசஸர் உடன் இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.
அதேபோல் ஏஐ அம்சங்களுடன் இந்த டிவியில் உள்ளன. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) வசதியும் இந்த டிவியில் உள்ளது.
தனித்துவமான டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 36W ஸ்பீக்கர்கள் இந்த ஏசர் அல்ட்ரா ஐ சீரிஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது ஏசர் டிவி மாடல். இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
மேலும் எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications