ஏசர் நிறுவனத்தின் S-series, H-series ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! என்ன விலை?

|

ஏசர் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துவருகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

H-series மற்றும் S-series

H-series மற்றும் S-series

இந்நிலையில் Acer நிறுவனம் இந்தியாவில் H-series மற்றும் S-series ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தபுதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன என்றுதான் கூறவேண்டும்.

 H-series ஸ்மார்ட் டிவிகள்

H-series ஸ்மார்ட் டிவிகள்

ஏசர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள H-series ஆனது 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிகள் 4K UHD ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளன.

அமோகமான ஆபர்களுடன் iPhone 14, iPhone 14 Pro இந்திய விற்பனை ஆரம்பம்!அமோகமான ஆபர்களுடன் iPhone 14, iPhone 14 Pro இந்திய விற்பனை ஆரம்பம்!

H-series டிவிகளின் அம்சங்கள்

H-series டிவிகளின் அம்சங்கள்

ஏசர் H-series ஸ்மார்ட் டிவிகள் ஆனது 420 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், எச்டிஆர் பிளஸ் ஆதரவு,எச்எல்ஜி, டால்பி விஷன் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை வழங்குகின்றன. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிகளின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

H-series டிவிகளின் ஆடியோ

H-series டிவிகளின் ஆடியோ

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏசர் H-series ஸ்மார்ட் டிவிகள் ஆனது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் 60W சவுண்ட் அவுட்புட் வழங்குகின்றன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

S-series  ஸ்மார்ட் டிவிகள்

S-series ஸ்மார்ட் டிவிகள்

அதேபோல் ஏசர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள S-series ஆனது 32-இன்ச், 65-இன்ச் ஸ்கிரீன் அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் 32-இன்ச் டிவி எச்டி ரெசல்யூசன்-ஐ கொண்டுள்ளது. ஆனால் இதன் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி 4K UHD ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது.

ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

S-series டிவிகளின் ஆடியோ

S-series டிவிகளின் ஆடியோ

S-series 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது எச்டிஆர் பிளஸ் ஆதரவு மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 40W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. மேலும் இதன் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 50W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.

 ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

ஏசர் S-series மற்றும் H-series ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகின்றன. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் போன்ற பல ஆப் வசதிகளை இந்த ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து ஸ்மார்ட் டிவிகளும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ப்ளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன.

ஸ்டோரேஜ் வசதி

ஸ்டோரேஜ் வசதி

S-series 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன. மற்ற அனைத்து ஸ்மாரட் டிவிகளும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளன.

என்ன விலை?

என்ன விலை?

  • ஏசர் S-series32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
  • ஏசர் S-series 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.64,999-ஆக உள்ளது.
  • ஏசர் H-series 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
  • ஏசர் H-series 50-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.
  • ஏசர் H-series 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
  • ஏசர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிகள் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Acer New H-series, S-series Smart TVs Launched India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X