மினி தியேட்டர்.. 32ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ், 60W ஸ்பீக்கர்கள்.. அறிமுகமானது புதிய டிவிகள்.. எந்த மாடல்?
ஏசர் (Acer) நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏசர் எம் சீரிஸ் ஹைபிரிட் மினிஎல்இடி டிவிகள் (Acer M series hybrid MiniLED TVs) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 65-இன்ச் மற்றும் 75-இன்ச் அளவுகளில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஏசர் எம் சீரிஸ் டிவிகளின் அம்சங்கள்: 4கே கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த 65-இன்ச் மற்றும் 75-இன்ச் டிவிகள். குறிப்பாக 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), 1.7 பில்லியன் கலர்ஸ், சூப்பர் பிளாக்லெவல் ஆக்மென்டேஷன் (Super Blacklevel Augmentation) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவிகளின் டிஸ்பிளே.

அதேபோல் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதியுடன் ஏசர் எம் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக லீஃப் கர்வ் டிசைன் (Leaf Curve Design) உடன் இந்த புதிய டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏசர் டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்
ஏஐ-எனேபிள் டூயல்-பிராசஸர் (AI-enabled dual-processor) உடன் ஏசர் எம் சீரிஸ் 65-இன்ச் மற்றும் 75-இன்ச் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் DynamIQ Realtek சிப்செட் வசதி இந்த டிவிகளில் உள்ளன.
பிரத்யேக ரியர் வூஃபர் மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் எம் சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன. குறிப்பாக டால்பி அட்மாஸ் வசதியை தற்போது பல முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவுடன் இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டிவிகள். எனவே அனைத்து ஆப்ஸ்களையும் இந்த டிவிகளில் தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology)ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன.

ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), கேமிங்கிற்கான 140 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த டிவிகளில் உள்ளன. குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல சிறப்பான வசதிகள் இந்த ஏசர் டிவிகளில் இடம்பெற்றுள்ளன. டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஏவி, ஆர்எஃப், ஈதர்நெட், மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன.
ஏசர் எம் சீரிஸ் ஹைபிரிட் மினிஎல்இடி டிவி 65-இன்ச் மாடல் ரூ.89,999 விலையிலும், 75-இன்ச் மாடல் ரூ.1,39,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த டிவிகள் அமேசான் (Amazon) தளத்தில் வாங்க கிடைக்கின்றன. அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications