Home
Gadgets

சத்தமில்லாமல் இறங்கிடுச்சு.. 10000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 16MP கேமரா.. புது Acer டேப்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சத்தமே இல்லாமல், ஏசர் நிறுவனத்தின் 2 டேப்லெட் மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன. வை-பை மாடல்களாக இல்லாமல், 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாகி இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்ப வாய்ப்புள்ளது. இந்த ஐகானியா மாடல்களின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏசர் ஐகானியா டேப் 11 5ஜி (Acer Iconia Tab 11 5G) மற்றும் ஏசர் ஐகானியா டேப் 12 5ஜி (Acer Iconia Tab 12 5G) ஆகிய மாடல்களே இப்போது வெளியாகி இருக்கின்றன. டிஸ்பிளே மற்றும் பேட்டரி கேபாசிட்டியில் மாற்றம் இருக்கிறது. மற்ற பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதேபோல விலையிலும் ரூ.6,000 வரையில் வித்தியாசம் இருக்கிறது.

சத்தமில்லாமல் இறங்கிடுச்சு.. 10000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. மாடல்?

லேப்டாப்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்க கீபோர்ட் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஏசர் ஐகானியா டேப் 11 5ஜி மற்றும் ஏசர் ஐகானியா டேப் 12 5ஜி கிடைக்கிறது. இதுபோக ஸ்டைலஸ் பென் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. ஃபிங்கர்பிரிண்ட் ரீடர் சப்போர்ட் கிடைக்கிறது. ஹைபிரிட் சிம் செட்டப் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கிடைக்கிறது.

ஏசர் ஐகானியா டேப் 11 5ஜி அம்சங்கள் (Acer Iconia Tab 11 5G Specifications): 10.95 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி8755 (Octa Core MediaTek MT8755) சிப்செட்டை கொடுத்துள்ளது.

13 எம்பி மெயின் கேமராவை இந்த ஏசர் ஐகானியா டேப் 11 5ஜி மாடல் கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7400mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட், 5G கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், டூயல் பேண்ட் வை-பை 5 (Dual-band Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கிடைக்கிறது.

ஏசர் ஐகானியா டேப் 12 5ஜி அம்சங்கள் (Acer Iconia Tab 12 5G Specifications): 12.2 இன்ச் (2400 x 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 16 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட மாடலாக இந்த ஏசர் ஐகானியா டேப் 12 5ஜி இருக்கிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10000mAh பேட்டரி கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஏசர் ஐகானியா டேப் 11 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் வேரியண்ட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் + கீபோர்டு வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆகவும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் + கீபோர்டு வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும் உள்ளது.

ஏசர் ஐகானியா டேப் 12 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் + கீபோர்டு வேரியண்ட்டின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஸ்டைலஸ் + கீபோர்டு வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆக இருக்கிறது. இந்த விலைகளுடன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், ஏசர் ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம். ஆப்லைன் ஸ்டோர்களிலும் இந்த மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Acer Iconia Tab 11 5G And Acer Iconia Tab 12 5G Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X