Home
Gadgets

43 இன்ச் டிவி ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. 16ஜிபி மெமரி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

ஏசர் (Acer) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஏசர் டிவி வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Acer I Pro Series Full HD Smart LED Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17499 விலையில் வாங்கிவிட முடியும்.

43 இன்ச் டிவி ஆஃபரில் வாங்க சரியான நேரம்.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Acer I PRO Series Smart Google TV Specifications): இந்த ஏசர் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

சக்திவாய்ந்த குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) உடன் இந்த ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு எச்டிஆர் 10 அம்சமும் இந்த டிவியில் உள்ளன. மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த டிவியில் உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

அதேபோல் யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer I PRO Series Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X