ஆர்டர் அள்ள போகுது.. 16GB மெமரி.. டால்பி ஆடியோ.. 30W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Acer I Pro Series Full HD Smart LED Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 30W ஸ்பீக்கர்கள், 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. இப்போது இந்த ஏசர் 43 இன்ச் டிவிக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Acer I PRO Series Smart Google TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் ப்ரைட்னஸ், 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
அதேபோல் 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் 4கே டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த 43 இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரிஸ் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.
குவாட் கோர் பிராசஸர் (Quad Core Processor) உடன் இந்த ஏசர் 43 இன்ச் ஐ ப்ரோ சீரிஸ் புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு எச்டிஆர் 10 அம்சமும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








