கொத்தா தூக்குவீங்க.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. அறிமுகமானது புதிய ஏசர் ஸ்மார்ட் டிவிகள்..
ஏசர் நிறுவனம் அசத்தலான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஏசர் நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று குறைந்த விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம்.
அதாவது ஏசர் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம். குறிப்பாக 32-இன்ச், 43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் அளவுகளில் இந்த ஏசர் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வாங்கக் கிடைக்கும். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏசர் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ55 சிபியு வதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பென்சேஷன் (எம்இஎம்சி) தொழில்நுட்பம், எச்டிஆர்10 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளில் இருக்கிறது.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஏசர் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளன இந்த அசத்தலான ஏசர் ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் சிறந்த கேமிங் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.
ஏசர் ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.42,999 விலையிலும், 55-இன்ச் டிவியை ரூ.62,999 விலையிலும் விற்பனைக்கு வரும். ஆனால் இதன் 65-இன்ச் டிவியின் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல் இந்த டிவிகளின் விற்பனை விவரங்களையும் வெளியிடவில்லை ஏசர் நிறுவனம். ஆனாலும் இந்த டிவிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது அமேசானில் 45 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. எனவே இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியை ரூ.10,999 விலையில் வாங்க முடியும். மேலும் ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, 178 டிகிரி வியூவிங் ஆங்கில் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.
64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி.
ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். ஏசர் 32-இன்ச் ஐ சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் நெட்ஃபிக்ஸ்,பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications