Home
Gadgets

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..

ஏசர் நிறுவனம் தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏசர் நிறுவனத்தின் 43 இன்ச் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது AR43FDGGR2841AD மாடல் நம்பர் கொண்ட ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி (Acer G plus Series 43 inch Full HD LED Smart Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்

ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் டிவி அம்சங்கள் (Acer G plus Series 43 inch Smart Google TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 16.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஃபிரேம்லெஸ் டிசைன்(Frameless Design) கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) இந்த ஏசர் டிவியில் உள்ளது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளன. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Acer G plus Series 43 inch Smart Google TV available at discounted price on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X