Just In
- 1 hr ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி, ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
- 15 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- 15 hrs ago
மே 23: அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ பேட் ஏர்.!
- 15 hrs ago
ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!
Don't Miss
- Sports
ஃபார்ம்க்கு திரும்பியது எப்படி? கோலி கூறிய ரகசியம்.. 90 நிமிட பயிற்சி குறித்து விளக்கம்
- News
என்ன ஆணவம்! ஆண்டாள் கோயில் ஊழியரை எட்டி உதைக்கும் அதிகாரி.. பரபர வீடியோ! பொங்கி எழும் நெட்டிசன்கள்
- Finance
மதுரை அலுவலகத்தினை விரிவாக்கம் செய்யும் ஹனிவெல் டெக்.. இனி வேற லெவல்..!
- Movies
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
CES 2022: மூன்று குரோம்புக் மாடல்கள் அறிமுகம் செய்த ஏசர் நிறுவனம்.!
ஏசர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின்
சாதனங்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் குரோம்புக்
ஸ்பின் 513, குரோம்புக் 315, குரோம்புக் 314 சாதனங்களை சிஇஎஸ் 2022-நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம்.

ஏசர் குரோம்புக் 315 அம்சங்கள்
ஏசர் குரோம்புக் 315 மாடல் ஆனது 15.6-இன்ச் anti-glare ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,920X1,080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ஏசர் குரோம்புக் 315. அதேபோல் OceanGlass டச் பேடைக் கொண்டுள்ளது இந்த ஏசர் குரோம்புக் 315 மாடல். இந்த சாதனம் 1.6 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டெல் Celeron டூயல் கோர் N4500,Celeron குவாட் கோர் N5100 ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் HDR வெப்கேமரைக் கொண்டுள்ளது இந்த புதிய ஏசர் குரோம்புக் 315 மாடல். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி eMMC மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஏசர் குரோம்புக் 315 மாடல். வைஃபை 6 மற்றும் டூயல் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் கொண்ட Chromebook 315 ஆனது 10 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
டெஸ்லாவை ஆளப்போகும் இந்தியர்- ஆட்டோபைலர் பிரிவின் முதல் ஊழியரான தமிழன் அசோக்: எலான்மஸ்க் பெருமிதம்!

ஏசர் குரோம்புக் 315 விலை
ஏசர் குரோம்புக் 315 மாடலின் விலை $ 299.99 (இந்திய மதிப்பில் ரூ. 22,300) ஆக உள்ளது. இந்த மாத இறுதியில் இந்த சாதனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசர் குரோம்புக் 314 அம்சங்கள்
ஏசர் குரோம்புக் 314 மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,920X1,080 பிக்சல் தீர்மானம் மற்றும் OceanGlass டச்பேடுடன் வருகிறது இந்த புதிய சாதனம். அதேபோல் இன்டெல் Celeron டூயல் கோர் N4500, Celeron குவாட் கோர் N5100 ஆதரவுகளுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏசர் குரோம்புக் 314 மாடல் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி eMMC மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. டிடிஎஸ் ஆடியோ
தொழில்நுட்பத்திற்கான ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட்களும் ஏசர் குரோம்புக் 314 மாடலில் இடம்பெற்றுள்ளன. Chromebook 314 இன் பேட்டரி முழு சார்ஜில் 10 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
டெஸ்லாவை ஆளப்போகும் இந்தியர்- ஆட்டோபைலர் பிரிவின் முதல் ஊழியரான தமிழன் அசோக்: எலான்மஸ்க் பெருமிதம்!

ஏசர் குரோம்புக் 314 விலை
ஏசர் குரோம்புக் 314 விலை $299.99 (இந்திய மதிப்பில் ரூ.22,300) ஆக உள்ளது. அதேபோல் இந்த சாதனம் வரும் ஏப்ரல் மாதம்அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 அம்சங்கள்
ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 மாடல் ஆனது 13.5-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 3:2 என்ற திரைவிகிதம், 2,256x1,504 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் Kompanio 1380 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 .

இந்த புதிய ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி eMMC சேமிப்பு வசதி உள்ளது. அதேபோல்இது டிடிஎஸ் ஆடியோவை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை 6, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லேப்டாப். குறிப்பாக Acer Chromebook Spin 513 இன் பேட்டரி 10 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
வெறும் ரூ.700 விலையில் புது போன்.. ஆண்ட்ராய்டு போனின் விலை கூட இவ்வளவு குறைவாக எங்கும் கிடைக்காது..

ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 விலை
ஏசர் குரோம்புக் ஸ்பின் 513 சாதனத்தில் விலை $ 599,99 (இந்திய மதிப்பில் ரூ.44,600) ஆக உள்ளது. இந்த சாதனம் வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999