Home
Gadgets

Acer மகாமாஸ்.. மோஸ்ட் பவர்புல் Projector ரெடி.. 5000 ANSI லுமென்ஸ் பிரைட்னஸ்.. விலை என்ன?

ஏஸர் (Acer) நிறுவனம் அதன் தயாரிப்பு சாதனங்களின் வரிசையில் புதிய சேர்ப்பாக நிறுவனம் புதிய ப்ரொஜெக்டர் (Projector) சாதனந்தை அறிமுகம் செய்துள்ளது. ஏஸர் நிறுவனம் இப்போது ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector) என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரொஜெக்டர் டிவைஸ் (Projector device) அட்டகாசமான அம்சங்களை பேக் செய்து, மிகவும் துல்லியமான விஷ்வலை (Visual) வழங்கும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஏஸர் (Acer) நிறுவனம் இப்போது சீன சந்தையில் புதிதாக ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector) என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் பவர்ஃபுல் ப்ரொஜெக்டர் சாதனத்தை வாங்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு அட்டகாசமான தேர்வாக வெளிவந்துள்ளது. ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector) சாதனத்தின் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

Acer மகாமாஸ்.. மோஸ்ட் பவர்புல் Projector ரெடி.. 5000 ANSI லுமென்ஸ்..

ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector):

இந்த புதிய ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector) சாதனம் 5000 ANSI லுமென்ஸ் பிரைட்னஸை (Lumens Brightness) வழங்கும் ஆல் கிளாஸ் லென்ஸ் (All glass lens) உடன் வருகிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் ஏஸார் லுமிசென்ஸ் டெக்னாலஜி (Acer LumiSense technology) அம்சத்துடன் வருகிறது. இது ஆட்டோமேட்டிக்காக பிரைட்னஸ் மற்றும் கலர் சேச்சுரேஷன் அளவை அறையின் வெளிச்சத்திற்கு ஏற்றார் போல அட்ஜஸ்ட் செய்துகொள்கிறது.

இதில் ஆட்டோமேட்டிக் இமேஜ் குவாலிட்டி அடஜஸ்ட்மென்ட் கண்ட்ரோல் அம்சமும் இருக்கிறது. இந்த ப்ரொஜெக்ட்ரோ சாதனம் 20,000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ உடன் டீப் பிளாக் மற்றும் ஷார்ப் டீடைல் விபரங்களை இந்த சாதனம் ப்ராஜெக்ட் செய்கிறது. இது சப்போர்ட் WXGA ரெசொலூஷன் 1280 x 800 உடன் WUXGA கன்டென்ட் (1920 x 1200) திறனுடன் வருகிறது.

இந்த ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் சாதனத்தில் கலர்பூஸ்ட் 3D (ColorBoost3D) மற்றும் கலர்சேஃப் II டெக்னலாஜி (ColorSafe II technologies) போன்ற அம்சங்களுடன் இது மிகவும் அற்புதமான கலரை வழங்குகிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் ப்ளூலைட் ஷீல்டு ஃபங்க்ஷன் (Bluelight Shield) உடன் வருகிறது. இது உங்கள் கண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் விலை (Acer AW620p Projector Price):

இந்த புதிய ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் 2 HDMI 1.4b போர்ட், அனலாக் RGB காம்போனென்ட் வீடியோ இன்புட், கம்போசைட் வீடியோ இன்புட், 3.5mm மினி ஜாக் ஆடியோ போர்ட் போன்ற பல கனக்டிவிட்டி அம்சத்தை வழங்குகிறது. இது 3W ஸ்பீக்கர் உடன் வருகிறது. இது எக்ஸ்டர்னல் ஆடியோ ஸ்பீக்கர் சாதனத்தை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது.

இந்த புதிய ஏஸர் AW620p ப்ரொஜெக்டர் (Acer AW620p Projector) 2.8 கிலோ எடையுடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், ஏஸர் நிறுவனம் இந்த Acer AW620p Projector சாதனத்தை $991 டாலர் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 82000 விலையில் வருகிறது. விரைவில் இது இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Acer AW620p Projector Launched 5000 ANSI Lumens Brightness All Glass Lens Launched Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X