Home
Gadgets

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 16GB ஸ்டோரேஜ்.. 30W ஸ்பீக்கர்கள்.. மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஏசர் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 மாடலுக்கு தான் பிளிப்கார்ட்டில் 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி முன்பு ரூ.32,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதுக்கு மேல குறைக்க முடியாது..  மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி..

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த டிவியை ரூ.17,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 வரை உடனடி தள்ளுபடி பெறமுடியும். இப்போது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2023 (Acer Advanced I Series Full HD LED Smart Google TV 2023) மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த அட்டகாசமான ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கார்டெக்ஸ் ஏ-55 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் கொடுக்கும். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் இந்த டிவி எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த 43-இன்ச் ஏசர் மாடல் கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில் 16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

இதுக்கு மேல குறைக்க முடியாது..  மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி..

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக ஏசர் 43-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ளன. தற்போது இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஏசர் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Acer Advanced I Series Smart TV is 45 percent off on Flipkart: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X