பொங்கல் SALE பிச்சிக்குது.. 61 சதவீத ஆபரில் 55 இன்ச் QLED டிவி.. Google TV ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
ஏசர் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ஏசர் கியூஎல்இடி டிவிகள் நம்ப முடியாத ஆஃபர் விலைக்கு கிடைக்கின்றன. அமேசான் தளத்தில் 50 சதவீதத்துக்கும் மேலான ஆஃபர் விலையில் கியூஎல்இடி டிவிகள் வாங்க கிடைக்கின்றன.
இப்போது, அமேசான் தளத்தில் 61 சதவீத தள்ளுபடி போக ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி (Acer 55 inch Ultra V Series 4K QLED TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.30,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Acer 55 inch Ultra V Series 4K QLED TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் டிவி கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), எம்இஎம்சி (MEMC) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது. டால்பி விஷன் (Dolby Vision), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) மற்றும் அல்ட்ரா விஷன் (Ultra Brightness) கிடைத்துள்ளது. 36 W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) கிடைக்கின்றன. ஸ்டான்டர்டு (Standard), ஸ்பீச் (Speech), மியூசிக் (Music), ஸ்டேடியம் (Stadium), யூசர் (User) ஆகிய மோட்களை கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைத்துள்ளது. ஏ75 மற்றும் ஏ55 ஏஐ ப்ராசஸர்களை கொண்டுள்ளது.
2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice Enabled Smart Remote) கிடைத்துள்ளது. மேலும், பாஸ்ட்காஸ்ட் (Fastcast), மீட்டிங் மோட் (Meeting Mode) கிடைத்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட குயிக்அக்சஸ் கீகளை இந்த ஏசர் 55 இன்ச் அல்ட்ரா வி சீரிஸ் 4கே கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. ஸ்கிரீன் சேவர் (Screen Saver), எகோ மோட் (ECO Mode), பர்சனல் ப்ரொபைல் (Personal Profile) கிடைக்கிறது.
கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) உள்ளது. டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) மற்றும் 2 வே ப்ளூடூத் (2 way Bluetooth) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், 2 யுஎஸ்பி போர்ட்கள், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், ஏஐ இன், எல்ஏஎஸ் மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டிகளை கொண்டுள்ளது. AR55QDVGU2875BD மாடலின் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








