சத்தமின்றி 55-இன்ச், 65-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: விலை எவ்வளவு தெரியுமா?
ஏசர் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சாம்சங், ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது ஏசர் நிறுவனம். தற்போது ஏசர் நிறுவனம் இரண்டு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது W சீரிஸ் என்ற பெயரில் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம். மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். மேலும் இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏசர் W சீரிஸ் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே அல்ட்ரடி எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், QLED பேனல், டால்பி விஷன் மற்றும் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் வெளிவந்துள்ளன..
குறிப்பாக Super Anti Glare, 4கே எச்டிஆர், 100% கலர் வால்யூம் QLED, 4K அப்ஸ்கேலிங், MEMC, 1.07 பில்லியன் வண்ணங்கள், HLG உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களை வழங்குகின்றன இந்த இரண்டு ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள். இதுதவிர லோக்கல் டிம்மிங், ப்ளூ லைட் கண்ட்ரோல், வைட் வியூவிங் ஆங்கிள், WCG+, சூப்பர் பிரைட்னஸ் போன்ற தனித்துவமான அம்சங்களை வழங்குகின்றன இந்த ஏசர் று சீரிஸ் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.
அதேபோல் 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன இந்த 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

கூகுள் ஆப்ஸ், ஃபார் ஃபீல்ட் மைக், மோஷன் சென்சார் மற்றும் வாய்ஸ்-கண்ட்ரோல்டு ஸ்மார்ட் ரிமோட் ஆகியவற்றுடன் வெளிவந்துள்ளன இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் இந்த டிவிகளில் நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் கேமிங் வசதிக்கு தகுந்தபடி பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான ஏசர் W சீரிஸ் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன இந்த புதிய ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை,புளூடூத் 5.0, ஈதர்நெட், ஹெட்ஃபோன் அவுட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல்கள். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் 3 ஆண்டுகளுக்கு வாரன்ட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசர் W சீரிஸ் 4கே QLED 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. பின்பு ஏசர் W சீரிஸ் 4கே QLED 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.89,999-ஆக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.


Click it and Unblock the Notifications








