அதிரி புதிரி ஆர்டர்.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி OS.. 50 இன்ச் 4K டிவியின் விலை குறைப்பு.. எந்த மாடல்?
ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி விலை குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஏசர் டிவி கூகுள் டிவி OS, 30W ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ஏசர் டிவி புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
முன்பு ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் தளத்தில் இந்த டிவியின் விலை குறைக்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Acer 50 inch G plus Series 4K TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், சூப்பர் பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
அதுவும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஏசர் 50 இன்ச் ஜி பிளஸ் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.
அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இந்த டிவியில் இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications







