நெருங்கும் தீபாவளி பண்டிகை.. 4K டிவிக்கு ஆபர் போட்டு அதிரடி காட்டும் அமேசான்.. எந்த மாடல்? என்ன விலை?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் தளத்தில் நடைபெறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) அசத்தலான ஏசர் (acer) 43 இன்ச் 4கே டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த டிவி கூகுள் டிவி ஓஎஸ், 16ஜிபி மெமரி, 30W ஸ்பீக்கர்ள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (acer 43 inch G Plus Series 4K Google TV) மாடலுக்கு 58 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎமஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த ஏசர் 4கே டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (acer 43 inch G Plus Series 4K Google TV Specifications): இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அல்ட்ரா எச்டி 4கே (4K Ultra HD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், சூப்பர் பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
தரமான குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் வசதியும் இந்த டிவியில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








