Home
Gadgets

மின்சாரத்தை உறிஞ்சும் ராட்சஸன்? AC நல்லதா இல்ல ஏர் கூலர் நல்லதா? 12 மணிநேரத்திற்கு எவ்வளவு மின் கட்டணம் வரும்?

இந்த வெப்ப காலத்தில் எல்லோருக்கும் இந்த சந்தேகம் நிச்சயமாக இருக்கும். ஏசி (AC) அதிக மின்சாரத்தை உறிஞ்சுமா அல்லது ஏர் கூலர் (Air cooler) அதிக மின்சாரத்தை உறிஞ்சுமா என்பது ஒரு பொதுவான கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

வெய்யிலின் தாக்குதல் இந்தியா முழுக்க பரவி மக்களை வாட்டி வதக்கி வருகிறது. இந்த கொடூரமான வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இப்போது ஏர் கூலர், ஏசி போன்ற சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மின்சதை அதிகமாக பயன்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், பல வீடுகளில் மின்கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாகியுள்ளன.

AC நல்லதா இல்ல ஏர் கூலர் நல்லதா? எது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது?

மின்சாரத்தை உறிஞ்சும் ராட்சஸன்? AC நல்லதா இல்ல ஏர் கூலர் நல்லதா?

ஏசி மற்றும் ஏர் கூலர் சாதனங்கள் இரண்டும் இப்போது அதிக பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனமாக மாரி வருகிறது. குறிப்பாக இந்த கோடைகாலம் துவங்கியதில் இருந்து, பல வீடுகளில் வெப்பத்தை தணிக்க உதவும் ஏதோவொரு எலக்ட்ரிக் சாதனம் இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால், மக்களுக்கு ஒரு நாள் முழுக்க ஏசி அல்லது ஏர் கூலர் பயன்படுத்தப்பட்டால் எவ்வளவு செலவாகும் என்பது தெளிவாக தெரியவில்லை.

அதை தான் இந்த பதிவில் உங்களுக்கு தெரிவிக்கப்போகிறோம். குறிப்பாக, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஏசியை இயக்கினால், எவ்வளவு மின் கட்டணம் வரும் என்பதை பார்க்கலாம். உங்கள் வீட்டில் நீங்கள் ஏசி பயன்படுத்தினாலும் சரி, அல்லது ஏர் கூலர் பயன்படுத்தினாலும் சரி, தொடர்ந்து ஒரு நாளுக்கு 12 மணிநேரம் இந்த சாதனங்களில் ஏதேனும் ஒன்றை இயக்கினால் உங்கள் மின்சார கட்டணம் எவ்வளவு வரும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற 1.5 டன் ஏசி இருக்கிறதென்று வைத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் 1 மணி நேரத்திற்கு இயங்கும் பொழுது, இது சுமார் 840 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துவதாக கணக்கிடப்படுகிறது. அதுவே ஒரே நாளில் 12 மணி நேரம் இயக்கப்பட்டால், 10080 வாட்ஸ் மின்சாரத்தை இந்த ஏசி சாதனம் எடுத்துக்கொள்கிறது.

12 மணிநேரத்திற்கு எவ்வளவு மின் கட்டணம் வரும்? மின்சாரத்தை உறிஞ்சும் ராட்சஸன் யார்?

மின்சாரத்தை உறிஞ்சும் ராட்சஸன்? AC நல்லதா இல்ல ஏர் கூலர் நல்லதா?

உண்மையை சொல்ல போனால், இது சற்று அதிகமான அளவாக உங்களுக்கு தோன்றலாம். இந்த கணக்கின் அடிப்படையில் பார்க்கையில், உங்கள் வீட்டில் ஒரு 1.5 டன் ஏசி 12 மணிநேரம் ஓடினால், 10 யூனிட் மின்சாரம் செலவாகும். இதன்படி, மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் செலவாகிறது மக்களே. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.7 என்ற கட்டணத்தை வைத்து கணக்கிட்டு பார்த்தால், ஏசி பயன்பாட்டினால் ரூ.2,100 மின் கட்டணம் செலவாகிறது.

ஒருவேளை உங்கள் வீட்டில் நீங்கள் ஏசி பயன்படுத்துவதற்கு பதிலாக ஏர் கூலர் சாதனத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால், 1 மணி நேரத்திற்கு 400 வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. இதன் மூலம் 12 மணிநேர பயன்பாட்டின் போது, 4800 வாட்ஸ் மின்சாரம் செலவாகிறது. இப்படி உங்கள் வீட்டில் உள்ள ஏர் கூலர் நாளொன்றுக்கு 4.8 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும். ஒரு மாதத்திற்கு 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

அதே 1 யூனிட் மின்சாரத்திற்கு 7 ரூபாய் என்ற விதத்தில் கணக்கிட்டு பார்த்தால், 12 மணிநேர ஏர் கூலர் பயன்பாட்டின் போது, உங்கள் மின்சார கட்டணம் ரூ.1,050 வரை செல்லக்கூடும். ஒரு வேலை உங்கள் வீட்டில் 3 ஸ்டார் ஏசி இருக்கிறது என்றால், உங்கள் மின்சார கட்டணம் இன்னும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எப்படி பார்த்தாலும், ஏசி சாதனம் மின்சாரத்தை உறிஞ்சும் ராட்சஸனாக திகழ்கிறது.

Best Mobiles in India

English summary
AC good or air cooler good How much electricity will be charged for 12 hours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X