Home
Gadgets

நைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ

இவை வரும் என நமக்கு தெரியும். ஆனால் நைக் நிறுவனம் அதன் முதல் தானாக லேஸ் கட்டும் கூடைப்பந்து ஷூக்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை வரும் என நமக்கு தெரியும். ஆனால் நைக் நிறுவனம் அதன் முதல் தானாக லேஸ் கட்டும் கூடைப்பந்து ஷூக்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. "ஒவ்வொரு கூடைப்பந்து வீரருக்கும் தனிப்பட்ட முறையில் பொருத்தமானதாக இருக்கவேண்டும்" என்பதற்காக இந்த புதிய காலணிகள் வடிவமைக்கப்பட்டதாக கூறும் இந்நிறுவனம், "பிட் அடாப்ட்" எனும் பவர் லேஸிங் சிஸ்டத்தின் வாயிலாக மேனுவலாக அல்லது ஸ்மார்ட்போன் செயலியின் உதவியுடன் லேஸை கட்டும் வகையில் இந்த ஷூக்களை உருவாக்கியுள்ளது.

நைக் அடேப்ட் பிபி : தானாக லேஸ் கட்டும் ஷூ

இதுதொடர்பாக இந்த விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூறுகையில், கூடைப்பந்து விளையாட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு விளையாட்டு வீரரின் பாதங்கள் பாதிக்கு மேல் விரிவடைவடையும் என்பதால் ஷூக்களால் அசவுகரியம் ஏற்பட்டு அவர்களது அசைவு மற்றும் விளையாட்டு திறமையையும் பாதிக்கும். இந்த பிரச்சனையை தான் அடாப்ட் பிபி உதவியுடன் நைக் நிறுவனம் சரிசெய்ய முயல்கிறது.

நைக்

நைக்

கூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு தங்களது காலணிகளின் மீதான தேவைகளின் காரணமாகவே, அடாப்ட் மற்றும் பிட்அடாப்ட் தொழில்நுட்பத்தை செயல்படுத்த கூடைப்பந்தை முதல் விளையாட்டாக தேர்வுசெய்ததாக கூறுகிறார் நைக் நிறுவனத்தின் இன்னோவேசன் பிரிவின் கிரயேடிவ் டைரக்டர் எரிக் அவார். இதன் மூலம் போட்டியின் போது வீரர்கள் எளிதாகவும் விரைவாகவும் தங்களது ஷூ லேஸ்களை தளர்த்திக்கொள்ளமுடியும் என கூறும் எரிக், இது விளையாட்டு வீரரின் அனுபவத்தை மேம்படுத்தும் என கூறியுள்ளார்.

ப்ளைகிநிட்

ப்ளைகிநிட்

காலணிகள் தனிப்பட்ட முறையில் பொருத்தமாக உள்ளது என்ற எண்ணத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இரு பேப்ரிக் அடிப்படையிலான தொழில்நுட்பங்களான ப்ளைவயர் மற்றும் ப்ளைகிநிட்-ஐ மேம்படுத்தி உருவாக்கப்பட்டது தான் இந்த அடாப்ட்பிபி.

பொத்தான்

பொத்தான்

"தற்போது இருப்பதிலேயே மிகவும் மேம்பட்ட பொருத்தமான தீர்வு" என அடாப்ட்-ஐ அழைக்கும் நைக் நிறுவனம், ஷூவில் உள்ள ஒரு பொத்தான் மூலமாகவோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியின் மூலமாகவோ ஷூவின் பலர் லேஸை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. அடாப்ட் பிபி-ஐ காலில் அணியும் போது, அதனுள் இருக்கும் பயிற்சியளிக்கப்பட்ட கியர்களுடன் கூடிய மோட்டார், உங்கள் பாதங்களுக்கு தேவையான விசையை உணர்ந்து அதன் லேஸ்களை தானாகவே சரிசெய்து கொள்ளும்.

சார்ஜ் செய்யவேண்டும்.

சார்ஜ் செய்யவேண்டும்.

பொதுவாகவே அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் மின்சாரம் என்பதால், இந்த அடாப்ட் பிபி ஷூவையும் சார்ஜ் செய்யவேண்டும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அது 14 நாட்களுக்கு நீடிக்கும் என்கிறது நைக் நிறுவனம். ஒவ்வொரு ஜோடி காலணிகளுடன் தரப்படும் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் மூலம் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யமுடியும்.

ஹைபர்அடாப்ட்1.0

ஹைபர்அடாப்ட்1.0

அடாப்ட் மொபைல் செயலியின் மூலம் விளையாட்டு வீரர்கள், அந்த குறிப்பிட்ட போட்டிக்கு தேவையான அளவுகளை உள்ளீடு செய்ய இயலும் மற்றும் பேட்டரி அளவை அறிந்துகொள்வது, எல்ஈடி நிறங்களை மாற்றுவது போன்றவற்றையும் செய்ய இயலும்.

2016ல் வெளியான ஹைபர்அடாப்ட்1.0 இல்லையெனில் இந்த அடாப்ட் பிபி சாத்தியமில்லை என கூறலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஹைபர்அடாப்ட் 1.0 காலணி 720டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், இந்த அடாப்ட் பிபி 320டாலர் என தனது விலையை குறைத்து நிர்ணயித்துள்ளது.

அடாப்ட் பிபி

அடாப்ட் பிபி

கூடைப்பந்து விளையாட்டிற்கான அடாப்ட் பிபி வெறும் துவக்கம் தான் எனக் கூறும் நைக், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு தொழில்நுட்பங்களில் புகுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்போதைக்கு பிப்ரவரி தொடக்கம் மூலம் உங்களது அடாப்ட் பிபி காலணியுடன் கூடைப்பந்து விளையாடி புதுமையான அனுபவத்தை பெறுங்கள்!

Best Mobiles in India

English summary
A closer look at Nikes Adapt BB auto-lacing basketball shoes: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X