அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உயிர் காக்கும் 9 கேஜெட்டுகள்!

|

நாம் அன்றாடம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் தான் அது நம் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது. மொபைல்போன் மற்றும் டேப்லெட் போன்ற மின்னணு பொருட்களின் மேம்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிற கண்டுபிடிப்புகளும் உள்ளன.

மின்சாரம் செயலிழப்பு போன்ற அவசர சூழ்நிலைகள்

மின்சாரம் செயலிழப்பு போன்ற அவசர சூழ்நிலைகள்

மின்சாரம் செயலிழப்பு போன்ற அவசர சூழ்நிலைகள் மற்றும் உடனடியாக பழுதுநீக்க வேண்டிய சூழ்நிலைகள் முதல் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் வரை எப்போதும் வேண்டுமானலும் நிகழலாம். உங்கள் முன்பு அத்தகைய சூழ்நிலைகள் வரும்போது என்ன வகையான கேஜெட்டுகள் உங்களுடனேயே இருக்கும்?

திடீரென வரும் இருதய அடைப்பின் போது உதவும் ஒரு எளிமையான டிஃபைபிரிலேட்டர் முதல் ஆல் இன் ஆல் அழகுராஜா போல பலதேவைகளுக்கு உதவும் விங்மேன் வரை, உங்களின் முக்கியமான நாளில் உங்களுடன் இருக்கும் புதுமையான, உயிர்காக்கும் தொழில்நுட்ப கேஜெட்களின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே.

1) சைரன் ரிங்

எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் சிலசமயங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்புவதை தவிர்க்கமுடியாது. ஆனால் எப்படி பாதுகாப்பாக இருப்பது?ஒருவேளை ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு வளையத்தின் உதவியுடன் பாதுகாக்கப்பட்ட மற்றும் நம்பகமான வழியை உணரமுடியும்.

நியூயார்க்-ஐ சேர்ந்த சைரன் நிறுவனம் சக்திவாய்ந்த மற்றும் திறமையான தொழில்நுட்பத்தின் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பை பேஷன் அணிகலனாக மாற்றியுள்ளது. பெண்கள் அணியக்கூடிய ஒரு அணிகலன் போல தோற்றமளிக்கும் இது இயக்கும் போது அதிக சப்தமுள்ள எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.


சைரன் பயங்கரமான, சகிப்புத்தன்மையில்லா உரத்த எச்சரிக்கை ஒலியை (110 டெசிபெல்ஸ்க்கும் அதிகமாக ), காது அருகில் அமைந்துள்ள போது 2 விநாடிகளுக்கு குறைவாக செயல்படுத்தமுடியும். இதன் ஒலி 50 அடி தொலைவுக்கும் அதிகமாக கேட்கும்.

மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!மூன்று ரியர் கேமராக்களுடன் அசத்தலான விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

2) லைப் ஸ்ட்ரா

உங்களுக்கு சிலசமயங்களில் எப்போது தண்ணீர் தேவை என தெரியாது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவசரகாலங்களில் அழுக்கு ஆற்றில் உள்ள தண்ணீரைக் கொண்டு கூட உங்கள் தாகத்தை தணிக்கலாம். எந்தவொரு இரசாயனங்கள், பேட்டரிகள், மின்சக்தி மற்றும் நகரும் பாகங்களும் இல்லாமல் செயல்படும் இந்த லைப் ஸ்ட்ரா , எந்தவொரு சாகச பயணத்திலும் பயன்படும் சாதனமாகும்.

குறைந்த எடைகொண்ட நீர்சுத்தகரிப்பு அமைப்பான இதன் மூலம் ஆறு குளம் ஏரிகளில் நேரடியாக தண்ணீர் குடிக்க முடியும். இது தண்ணீரில் உள்ள அனைத்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களையும் நீக்கும் திறனுடையது. ஆனால் இது இரசாயனங்கள், உப்புநீர், கனரக உலோகங்கள் மற்றும் வைரஸ்களை வடிகட்டாது.

3) விரிஸ்ட் பேண்ட் பவர்பேங்க் சார்ஜர்

3) விரிஸ்ட் பேண்ட் பவர்பேங்க் சார்ஜர்

எப்போதும் கூடவே ஒரு தனி பேட்டரியை வைத்திருப்பது அதன் அளவு மற்றும் அடைத்துக்கொள்ளும் இடம் போன்றவற்றால் சவுகரியமான ஒன்றாக இருக்காது. கைகாப்பு(பிரேஸ்லெட்) போன்று அணிந்துகொள்ளும் இந்த விரிஸ்ட் பேண்ட் பவர்பேங்க் சார்ஜர் சாதனம் மூலம், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

3000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த பவர்பேங்-ல் உள்ள யூஎஸ்பி சார்ஜர் மூலம் எந்த வகையான போன்களையும் சார்ஜ் செய்ய முடியும். மேலும் இது தண்ணீர் எதிர்ப்பு திறன் கொண்டதுடன், போன் முழுவதும் சார்ஜ் ஆனவுடன் எல்ஈடி ஒளி மூலம் தெரிக்கும் திறன் கொண்டது.

வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!வாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்!

4) கிரிடிட்கார்டு லைட் பல்பு

பல பில்கள் நிரம்பி வழியும் இருளடைந்த உங்கள் பர்ஸ்க்குள் இருந்து ஒரு குறிப்பிட்ட பில்லை கண்டறியும் சூழ்நிலையை நினைத்து பாருங்கள். இதுபோன்ற நேரங்களில் தவறவிடும் அல்லது தொலைக்கும் பணம் மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும்.

இதற்காக தோன்றிய ஒரு பிரகாசமான யோசனை தான் கிரிடிட்கார்டு லைட் பல்பு. சாதாரண அட்டை போன்று தோற்றமளிக்கும் இதன் நடுவில் உள்ள பல்பை செங்குத்தாக அழுத்தி அந்த அட்டையை அதற்கு ஸ்டேண்டாக பயன்படுத்தலாம்.

அன்றாடம் பயணம் செல்லும் போது எடுத்துச்செல்லும் வகையில் மிககுறைந்த எடைகொண்ட இந்த பல்பு, 1வாட் திறனுடைய எல்ஈடி ஒளியை வெளியிடும்.

5)லெதர்மேன் விங்மேன் பன்கருவி

பராமரிப்பு அல்லது வீட்டு மேம்பாடு அல்லது DIY(நீங்களாக முயற்சித்தல்) அல்லது கேம்ப் அல்லது ஹைகிங் என எதுவாக இருந்தாலும், உங்களுடனேயே இருக்கவேண்டிய கருவி லெதர்மேன் விங்மேன் . விங்மேன் ஒரு இலகுரக, பாக்கெட் அளவிலான, ஸ்டைன்லஸ் ஸ்டீல் பன்-கருவி.


வழக்கமான இடுக்கி, ஒயர் கட்டர், ஒயர் ஸ்ட்ரிப்பர், 420HC காம்போ கத்தி, கத்தரிக்கோல், பேக்கேஜ் ஓபனர், ரூலர், கேன் ஓபனர், பாட்டில் ஓபனர், பிலிப்ஸ் ஸ்க்ரூடிரைவர், நடுத்தர ஸ்க்ரூடிரைவர், மற்றும் சிறிய ஸ்க்ரூடிரைவர் உள்ளிட்ட 14வகையான கருவிகளை உள்ளடக்கிய ஒரு நவீன சாதனம் இது.

6) ஆப்கிரிட் சோலார் பைகள்

போட்டோகிராபர்கள், பயணிகள் மற்றும் உலகம் சுற்றுபவர்களுக்கு ஒரு சிறந்த பின்புற பை இது.


வோல்டிக் ஆஃபிரிட் சோலார் திறனுடயை இந்த பின்புற பை(BackPack) பகல் நேரம் இருக்கும் வரை உங்கள் கேஜெட்டுகளுக்கு மின்சாரம் அளிக்கும். சூரிய ஒளி மூலம் உங்கள் வால்டிக் பேட்டரியை சார்ஜ் ஏற்றி, உங்கள் சாதனங்களை எல்லா நேரத்திலும் சார்ஜ் செய்ய USB போர்ட்டைப் பயன்படுத்துங்கள்.


பேட்டரி, சோலர்பேனல் போன்றவற்றுடன் சேர்த்து வெறும் 2கிலோ எடைகொண்ட இந்த பை, சோடா பாட்டில்களை மறுசுழற்சி செய்து கிடைத்த பேப்ரிக் மூலம் தயாரிக்கப்பட்டது. தண்ணீர் எதிர்ப்புதிறன் கொண்டதுடன், அனைத்துவகை ஸ்மார்ட்போன்கள், டிஎஸ்எல்ஆர் மற்றும் சில டேப்லெட்கள் சார்ஜ் செய்ய உதவும் இதன் விலை 199 டாலர்கள் மட்டுமே!.

7)ரெஸ்க்யூம் கார் எஸ்கேப் டூல்

கார்கள் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், வாகனங்களுக்கு இந்த ரெக்ஸ்யூம் ஒரு சிறந்த பாதுகாப்பு அம்சமாகும்.


கீசெயின் வடிவிலான கார் எஸ்கேப் கருவியான இந்த ரெஸ்க்யூம், சாலைகளில் பயனர்களை பாதுகாப்பாக வைக்கிறது. விபத்து சூழ்நிலைகளில், வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை பெற்ற இந்த கருவி, பக்கவாட்டு ஜன்னல்களை உடைக்கவும், சிக்கலான சேப்டி பெல்ட்கள் அறுக்கவும் உதவுகிறது. அதன் சிறிய, இலகுரக மற்றும் சக்திவாய்ந்த அம்சங்கள் மூலம், மிகவும் மலிவான மற்றும் நம்பகமான கார் எஸ்கேப் கருவியாக திகழ்கிறது.

8) பயோலைட் கேம்ப்ஸ்டவ்

மரக்கட்டைகளை பயன்படுத்தி உங்களால் நெருப்பை மின்சாரமாக மாற்றமுடியும். ஒரு இலகுரக பை மற்றும் ஆப்-கிரிட் சார்ஜர் நன்மைகளை ஒருங்கேகொண்ட, இந்த பயோலைட் எனப்படும் மரக்கட்டை எரிக்கும் கேம்ப்ஸ்டவ் மூலம் உங்கள் கேஜெட்களை சார்ஜ் செய்துகொண்டே உணவு சமைக்க முடியும். இந்த கேம்ப்ஸ்டவ் முகாம்களில் தங்கவும் மற்றும் அவசர தயார்நிலை கருவி என இரண்டிற்கும் ஒரே சரியான தீர்வு.


பயோலைட்-ன் காப்புரிமை பெற்ற தெர்மோஎலக்ட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயோலைட் கேம்ப்ஸ்டவ் எல்இடி விளக்குகள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற தனிப்பட்ட கேஜெட்டுகளை சார்ஜ் செய்ய தேவையான மின்சாரத்தை உருவாக்குகிறது.


மரக்கட்டைகளை மட்டும் எரிப்பதன் மூலம், இந்த கேம்ப்ஸ்டவ் புகையில்லா கேம்ப்பயரை உருவாக்குவதுடன், நிமிடத்தில் உணவுசமைக்கவும், தண்ணீரை கொதிக்க வைக்கவும் உதவுகிறது.

9) பிலிப்ஸ் ஹார்ட்ஸ்டார்ட் ஹோம் டிஃபைப்ரில்லேட்டர்

மற்ற அனைத்து முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை போலவே, இந்த பிலிப்ஸ் ஹார்ட்ஸ்டார்ட் ஹோம் டிஃபைப்ரில்லேட்டர் சாதனமும் பாதுகாப்பான, உறுதியான மற்றும் பயன்படுத்த எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


திடீரென்று வரும் மாரடைப்பின் போது, இதயத்தின் மின் அமைப்புகள் சார்ட் சர்க்யூட் ஆகும். இது இதயத்தை சாதாரண அளவில் இயங்கவிடாமல் செய்யும் . இதனால் நாளத்துடிப்பு எனும் அசாதாரண இதயத் துடிப்பு ஏற்படும்.


இதிலிருந்து மீண்டுவருவதற்கு, 5நிமிடத்திற்குள் டிஃபைப்ரில்லேட்டர் பயன்படுத்தவேண்டும். மற்ற டிஃபைப்ரில்லேட்டர்களை பயன்படுத்த முறையான பயற்சிகள் தேவைப்படும் நிலையில், பிலிப்ஸ் ஹார்ட்ஸ்டார்ட் ஹோம் டிஃபைப்ரில்லேட்டர்க்கு எதுவும் தேவையில்லை.

Best Mobiles in India

English summary
9 Life Gadgets That Everyone Should Know About: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X