டிவி மார்க்கெட் காலி.. பழைய 43-இன்ச் TV-களுக்கு டாட்டா காட்டும் விலை.. புதுசா வந்த 65, 75-இன்ச் QLED 4K டிவி!
ப்ளூபங்க்ட் (Blaupunkt) நிறுவனம் தனது புதிய சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரீஸை (SonicQ QLED TV Series) இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த சீரீஸின் கீழ் 3 வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளை கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
டிஸ்பிளே, சவுண்ட் மற்றும் ஸ்மார்ட் திறன்களின் வலுவான கலவையை வழங்கும் சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரிஸ் மாடல்கள் ஆனது க்யூஎல்இடி 4கே பேனல் (QLED 4K Panel) , 120ஹெர்ட்ஸ் எம்இஎம்சி (120Hz MEMC), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 80W ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் (Stereo Speakers) போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

ஒட்டுமொத்தமாக சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரீஸ் மாடல்கள் ஆனது பொழுதுபோக்கு மற்றும் கேமிங்கிற்கான ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமைகிறது. சரி வாருங்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளின் முழு அம்சங்கள், செயல்திறன் விவரங்கள், ஸ்க்ரீன் அளவுகள் மற்றும் அவைகளின் விலை நிர்ணயங்கள் குறித்து விரிவாக காணலாம்.
ப்ளூபங்க்ட் சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரீஸின் கீழ் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் என மொத்தம் 3 ஸ்க்ரீன் சைஸ்களில் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் மெல்லிய, பெசல்-லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளன. மேலும் க்ளீன் ஆன மற்றும் நவீன தோற்றத்திற்காக அலாய் ஸ்டாண்டுடன் வருகின்றன.
ஒவ்வொரு மாடலும் 1.1 பில்லியன் கலர்களை உருவாக்கும் திறன் கொண்ட க்யூஎல்இடி 4கே டிஸ்பிளேவை கொண்டுள்ளன. எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் மற்றும் 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வரும் இந்த 3 டிவிகளுமே விரிவான மற்றும் துடிப்பான விஷூவல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.
விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) உடன் இணைக்கப்பட்ட 120ஹெர்ட்ஸ் எம்இஎம்சி அமைப்பு ஆனது மங்கலான தன்மையை குறைக்க உதவுகிறது. இது விளையாட்டு மற்றும் கேமிங் கன்டென்ட்டிற்கான தெளிவையும் மேம்படுத்துகிறது. ப்ளூபங்க்ட் சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரீஸ் மாடல்கள் ஆனது 2ஜிபி ரேம மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆப்ஸ் மற்றும் செயல்திறன் நிலைத்தன்மைக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.
டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்ட 80W ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் மூலம் இந்த டிவி மாடல்களின் சவுண்ட் அவுட்புட் கையாளப்படுகிறது. இது திரைப்படங்கள் மற்றும் கேம்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இந்த முழு டிவி சீரிஸும் கூகுள் டிவி 5.0 மூலம் இயங்குகிறது. இது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள், ப்ரொபைல் ஆதரவு மற்றும் பரந்த அளவிலான ஆப்களுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த டிவிகளில் நெட்ஃபிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி மற்றும் யூட்யூப் போன்ற கன்டென்ட் தளங்கள் அனைத்தும் ஆதரிக்கப்படுகின்றன.
கனெக்ட்விட்டியை பொறுத்தவரை இந்த டிவிகள் டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, பல எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் சவுண்ட்பார்கள் மற்றும் கேமிங் கன்சோல்களுடன் இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளன. கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு கொண்ட இதன் ரிமோட்டில் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூட்யூப் ஆகியவற்றிற்கான ஷார்ட்கட் கீஸ்கள் உள்ளன மற்றும் விரைவான அணுகலுக்கான விருப்பமான ஆப் பட்டன் ஆகியவைகளை கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ப்ளூபங்க்ட் சோனிக்யூ க்யூஎல்இடி டிவி சீரீஸின் கீழ் உள்ள 3 மாடல்களுமே பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. 55 இன்ச் மாடலின் விலை ரூ.32,999 ஆகும். 65 இன்ச் மாடலின் விலை ரூ.44,999 ஆகும் மற்றும் 75 இன்ச் மாடலின் விலை ரூ.65,999 ஆகும்.


Click it and Unblock the Notifications








