Home
Gadgets

TV-க்கு கும்பிடு.. 160 இன்ச் டிஸ்பிளே.. ரூ.10000-க்கு வந்த LED புரொஜெக்டர்.. 1080p வீடியோ, பில்ட்-இன் ஆடியோ!

ஹோம் தியோட்டர் புரொஜெக்டர் பட்ஜெட்டில் கிடைப்பது மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் வந்தால் விடவா முடியும். வெறும் ரூ.10000 பட்ஜெட்டில் 160 இன்ட் டிஸ்பிளே புரொஜெக்சன், இன்-பில்ட் ஸ்பீக்கர்கள், ரிமோட் கன்ட்ரோல், மல்டி கனெக்டிவிட்டி, மிராகாஸ்ட், ஸ்க்ரீன் மிரரிங், ஃபுல்எச்டி சப்போர்ட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 (Zebronics PixaPlay 22) கிடைக்கிறது. இந்த ஜெப்ரானிக்ஸ் புரொஜெக்டரின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹோம் தியேட்டர் புரொஜெக்டர்களை அடிமட்ட பட்ஜெட்டில் வாங்கும்போது, அதன் பீச்சர்களை பார்க்க வேண்டும். ரூ.10,000 பட்ஜெட்டில் வாங்குவதாக இருந்தால், மிட்-ரேஞ்ச் பீச்சர்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், பட்ஜெட்டுக்கு வரும் பீச்சர்கள் வொர்த்தாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கி கொள்ளலாம். இதை ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 ஓரளவுக்கு மேட்ச் செய்து இருக்கிறது.

TV-க்கு கும்பிடு.. 160 இன்ச் டிஸ்பிளே.. ரூ.10000-க்கு புரொஜெக்டர்!

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 அம்சங்கள் (Zebronics PixaPlay 22 Specifications): இதுவொரு ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Smart LED Projector) மாடலாகும். காம்பாக்ட் டிசைனில் இருந்தும் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் (Built-in Speakers) கிடைக்கிறது. ஆகவே, மீடியம் சைஸ் ரூம்களில் எக்ஸ்டர்னல் ஆடியோ சப்போர்ட் தேவைப்படாது. இந்த புரொஜெக்டரில் எல்க்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) கிடைக்கிறது.

மேலும், 3200 லூமன்சென்ஸ் கிடைப்பதால், மீடியம் சைஸ் புரொஜெக்சன் செய்யும்போது குவாலிட்டியான அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 1080p ரெசொலூஷன் கொடுக்கப்படுகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD) அவுட்புட்டில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். இந்த எல்இடி லாம்ப் மூலம் 30,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்று கொள்ளலாம். மல்டி கனெக்டிவிட்டி (Multi Connectivity) உள்ளது.

ஆகவே, ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), டூயல் பேண்ட் (Dual Band), மிராகாஸ்ட் (Miracast), ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல போர்ட் அவுட்புட் பார்க்கையில் எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயுஎக்ஸ் (AUX OUT) கிடைக்கிறது. ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலாக இருப்பதால், குவாட் கோட் (Quad Core) சிப்செட் கிடைக்கிறது.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வருகிறது. ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0) கிடைக்கிறது. 160 இன்ச் டிஸ்பிளே வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் 1920 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன் கிடைக்கும். இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலானது 790 கிராம் எடை வருகிறது. ஈஸி அக்சஸ் கொடுக்க ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) கன்ட்ரோல் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் வருவதால், ஆப்கள் சப்போர்ட் வருகிறது. இப்படி பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் கொடுத்து இருக்கிறது. ஹோம் தியேட்டர் அனுபவத்தில் மூவிக்கள் மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படியான புரொஜெக்டருக்கு இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். மற்றொரு காரணமாக பிளிப்கார்ட் தளத்தில் பக்கா டிஸ்கவுண்ட் இருக்கிறது.

இந்த புரொஜெக்டர் மார்கெட்டுக்கு வந்தபோது ரூ.12,999 ஆக விலை இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.2000 விலை குறைந்து, ரூ.10,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையிலும் ரூ.550 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலை ரூ.10,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
71 Percent Discount on Zebronics PixaPlay 22 With Electronics Focus in Flipkart Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X